5 மார்ச், 2009

வாய்மூடி சிரிக்கலாம் போங்க ! அரசியல்

தலைவர் : ... நான் பேசியவை அனைத்தும் உண்மை, இதைத்தான் தான் திருவள்ளுவரும் தன் நூலில் தெரிவித்துள்ளார்
தொண்டன் : எந்த நூலில் தலைவா ?
தலைவர் : (பெயரை மறந்து...) அந்த நூலின் பெயரை எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்த போது அரசு குறிப்பில் இருந்து அழித்து சதிசெய்துவிட்டனர். அதற்கு இங்கே பலமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

***

தலைவர் : இந்த முறை அலையில்லாத தேர்தல்னு ஊடகங்கள் தெரிவிக்குது, இதுக்கு நாம எதாவது செய்து அலையை கொண்டுவந்து தேர்தலில் ஜெயிக்கனும்

பொதுசெயலளர் : வேட்பாளர்களுக்கு காவி உடை கொடுத்து கையில் திருவோட்டைக் கொடுத்து ஓட்டு கேட்கச் சொல்லுவோம், பரிதாப அலை ஏற்பட்டு அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம்

***

மேடையில் தலைவர் : 'எதோ எங்களுடன் போட்டி போட்டு பிரியாணி போட்ட எதிர்கட்சி அதில் உப்புப் போட மறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது, பிரியாணியில் உப்புப் போட மறப்பவர்கள், நாளைக்கு ஜெயித்து வந்தால் நாட்டுமக்களை நினைப்பார்களா ? நினனத்துப் பாருங்கள். உங்களுக்கு இப்படி ஒரு (க)சப்பான அரசு தேவையா ?

தொண்டர் மெதுவாக அவரது காதில் (தலைவா பிரியாணியில் உப்பு போட மறந்தது நம்ம கட்சிதான்)

மேடையில் தலைவர் : .... இப்படியெல்லாம் எதிர்கட்சி உங்களை குழப்பிவிடுவார்கள், உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

***

தொண்டன் 1 : நம்ம தலைவர் மைக்கு முன்னாடி போய் திரும்பிப் பார்த்துட்டு பேசாமல் நிற்கிறாரே ஏன் ?

தொண்டன் 2 : இன்னிக்கு ஸ்டாட் ஆக்சன் சொல்றவருக்கு உடம்பு சரியில்லைன்னு உடன் வரலையாம். வேறொருத்தரை கூப்பிட ஆள் போய் இருக்கு. நடிகராக இருந்தவராச்சே !

***

நிருபர் : உங்கள் கட்சி எந்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறது

யாருமே சேர்த்துக் கொள்ள விரும்பாத கட்சியின் தலைவர் : எங்களோடு கூட்டணி சேரும் தகுதி எந்த கட்சிக்குமே இல்லாததால் இந்த தேர்த்தலில் நாங்கள் தனித்தே போட்டி இடப் போகிறோம். நாளையே கூட்டணிக்கு அழைப்பு வந்தாலும் இனி ஏற்கமாட்டோம்

நிருபர் : ஏன் ஏற்கமாட்டிங்க ?

தலைவர் : ஏனென்றால் இன்றோடு வேட்பு மனுதாக்கல் அனைத்தும் முடிகிறது என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது

5 கருத்துகள்:

  1. முதல் காமெடி மிக அருமை

    நன்றாக இருக்கிறது அண்ணா

    பதிலளிநீக்கு
  2. அரசியல் காமெடி ஆரம்பிச்சாச்சு போல..

    பதிலளிநீக்கு
  3. ////
    வேட்பாளர்களுக்கு காவி உடை கொடுத்து கையில் திருவோட்டைக் கொடுத்து ஓட்டு கேட்கச் சொல்லுவோம், பரிதாப அலை ஏற்பட்டு அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம்
    //////


    வயிறு வலிக்குது

    ///
    இப்படியெல்லாம் எதிர்கட்சி உங்களை குழப்பிவிடுவார்கள், உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
    /////

    நல்ல பல்டி



    //////
    இன்னிக்கு ஸ்டாட் ஆக்சன் சொல்றவருக்கு உடம்பு சரியில்லைன்னு உடன் வரலையாம். வேறொருத்தரை கூப்பிட ஆள் போய் இருக்கு. நடிகராக இருந்தவராச்சே !
    /////


    உள் குத்து உள்குத்து....



    ///////

    யாருமே சேர்த்துக் கொள்ள விரும்பாத கட்சியின் தலைவர்
    /////


    யாருங்க அதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    பதிலளிநீக்கு
  4. //, உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.//


    :))

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !