புண்ணியகோடி : என்ன சொல்றிங்க, உங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைப்பது ஆற்காட்டாரின் அருளால் கிடைத்த புண்ணியமா ?
தெய்வசிகாமணி : ஆமாம், இப்போதெல்லாம் மெகாசீரியல் ஓடும் போது எப்போ கரண்ட் போகும் என்பதே தெரியாததால் வீட்டில பார்பது இல்லை, டயத்துக்கு சமைச்சிடுறாங்க
*******
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********
கமலா : அவன் ப்ளாக் எழுதுறவன் என்று எப்படி கண்டு பிடிச்சே
விமலா : மி த பர்ஸ்ட் ? என்னு கேள்வியாக பார்த்து ரோஜாப்பு கொடுத்துட்டு ஐ லவ் யூங்கிறாண்டி.
********
தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல
செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார்.
ஆகா!
பதிலளிநீக்குமி த 2 ?
பதிலளிநீக்கு:)
:-))))....
பதிலளிநீக்கு:-)))))
பதிலளிநீக்குராதாகிருஷ்ணன்- நம்ம வாய் விட்டு சிரியுங்க..இனிமே எடுபடாது
பதிலளிநீக்குகாஞ்சனா- ஏன் அப்படி சொல்றீங்க?
ராதாகிருஷ்ணன்-கோவி வேற ஆரம்பிச்சுட்டாரே!!!
:-))))
//T.V.Radhakrishnan said...
பதிலளிநீக்குராதாகிருஷ்ணன்- நம்ம வாய் விட்டு சிரியுங்க..இனிமே எடுபடாது
காஞ்சனா- ஏன் அப்படி சொல்றீங்க?
ராதாகிருஷ்ணன்-கோவி வேற ஆரம்பிச்சுட்டாரே!!!
:-))))
//
'அட.. அசத்தல் !' போட வச்சிட்டிங்க, சும்மா... சும்மா... உங்க பாணியில் எழுதிப் பார்த்தேன். நாலு எழுதறத்துக்குள் நாள் முழுவதும் யோசிக்க வேண்டியதாகப் போச்சு. நகைச்சுவை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. மண்டை காயுது. உங்கள் வழியில் குறுக்கிட மாட்டேன். :)