ஆண்கள் வெட்கப்படுவது எப்போது ? - Adults Only
Monday, October 06, 2008
ஒரு ஆண் பாலியல் தொழிலாளியிடம் முதல் முறை செல்லும் போது இருக்கும் கூச்சத்தை விட, அப்படி செல்லாத ஆண்கள் ஒவ்வொரு முறையும் ஆணுறை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன்.
நம் இந்தியாவில் ஆணுறைகள் கிடைக்கும் இடம் பெரும்பாலும் மருந்து கடைகள் (Medical Shop) தான், வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடை, பொட்டிக் கடைகளில் கூட கிடைக்கும். ஆனாலும் தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக்கம் இருக்கும்.
அறிமுகமில்லாத மெடிக்கல் ஷாப் எங்கிருக்கிறது என்று பார்பார்கள், அதன் பிறகு அந்த கடையில் யாராவது மருந்து வாங்க நிற்கிறார்களா என்று பார்ப்பார்கள், அதன் பிறகு யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு கடைக்கு அருகில் சென்றால் எதிர்பாராத அதிர்ச்சியாக அங்கு ஒரு பெண் பணியாளர் இருப்பார். அவ்வளவுதான் அடுத்த கடைக்கு நடையைக் கட்டிவிடுவார்கள். அங்கு ஆண் பணியாளர் இருந்தால் மட்டுமே வாங்குவார்கள், அவர் தரும் வரைக்கும் யாரும் கடைக்கு வேறு எதாவது வாங்க வந்துவிடுவார்களோ என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி ப்ராண்ட் பெயரைக் கடைக்காரர் கேட்டுவிட்டால் அதற்கும் கூச்சம் வந்துவிடும், அதற்கெனவே சுறுக்கமான இரண்டு எழுத்து பெயர் இருக்கும் (KS - Kama Sutra ...) அதை சற்று தயக்கத்துடனே சொல்லி வாங்குவதற்குள் மூச்சு வாங்குவார்கள், இந்த லட்சணத்தில் வாசனை கலந்தது, சொரசொரப்பு உள்ளது, அதிர்வு உள்ளது என்கிற வகைகளெல்லாம் வேறு இருக்கும், அதை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூச்ச உணர்வினால் சொல்லிக் கேட்கவும் பலருக்கு தயக்கமாகவே இருக்கும்.
நண்பரின் மருந்து கடைக்குச் செல்லும் போது இந்த காட்சிகளையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். இங்கே சிங்கையில் யாரும் அவ்வளவு கூச்சப் படுவது போல் தெரியவில்லை. பேரங்காடிகளில் மளிகை பொருள்களோடு மாதத்திற்கு தேவையான அளவு அதனையும் சேர்த்து வாங்குவார்கள். பெரும்பாலும் பெண்கள் தான் பில் போட்டுத் தருவார்கள். சிங்கை முஸ்தபாவில் (பெரும்பாலும் இந்தியர்கள் செல்லும் கடை) தரைத்தளத்திலேயே விதவிதமான ஆணுறைகள் வைத்திருக்கும் ஒரு பகுதி இருக்கும், யாராவது ஒரு ஆண் அங்கு தைரியமாக நின்றாலே அவரை பலரும் ஒரு முறையேனும் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
ஆணுறை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் தேவையற்றதாகவே தெரிகிறது. வாங்குவதற்கு இவ்வளவு தயக்கம் காட்டும் நம்மக்கள் மக்கள் தொகையை இந்த அளவுக்கு உயர்த்தி இருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இங்கே வெளிநாட்டில் செக்ஸ் டாய்ஸ் கடைகள் ஒரு சில இடங்களில் இருக்கும், அதனுள் சென்று வருபவர்கள் எவரையும் பார்த்தால் திருமணம் ஆனவர்களாகவே தெரியாது. திருமணம் ஆகாதவர்களுக்கு மாற்று வடிகால், அது சரியா ? தவறா ? என்பது தனிமனித மனம் தொடர்புடையது. இருந்தாலும் கண்டிப்பாக அவற்றினால் பாலியல் நோய்கள் வராது.
பெரும்பாலும் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு ஆணுறை வாங்கச் செல்லும் போது தயக்கமும், கூச்சமும் இருக்கும், அதைத் தவிர்க்க,
'முடிந்த' ஆண்களுக்குத்தானே ஆணுறை தேவை, வாங்கும் போது 'என்னால் முடியும்' என்ற நினைப்பின் உற்சாகம் இருந்தால் ஆணுறை வாங்கப் போகும் போது கூச்சம் கண்டிப்பாக வராது ! :)
********
பெங்களூரு: பெங்களூரில், ஆணுறை வாங்கினால், "டார்ச் லைட்' பரிசாக வழங்கப்படுகிறது. மக்களிடம் ஆணுறை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்க, வித்தியசமான பிரசார முறைகளை, பாப்புலேஷன் சர்வீஸ் இன்டர் னேஷனல் (பி.எஸ்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம், கையாண்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு, ஆணுறை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அறிய, சர்வே நடத்தியது. அதில், கடைக்கு சென்று ஆணுறை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவது தெரிய வந்தது. ஆணுறையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. - இது தினமலர் செய்தி
இந்த திட்டம் தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டால் நல்லது, தமிழக மக்கள் தான் மின்சாரம் இல்லாமல் கும்மிருட்டில் அவதிக்குள்ளாகுறார்கள். :)
படிக்கத் தவறாதீர்கள் :
பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only - பொடியன்--SanJai

67 கருத்துக்கள்:
:-)))...
நல்ல கருத்தாய்வு, நல்ல பரிந்துரை!!!
//இந்த திட்டம் தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டால் நல்லது, தமிழக மக்கள் தான் மின்சாரம் இல்லாமல் கும்மிருட்டில் அவதிக்குள்ளாகுறார்கள்.//
ஒருவேளை தீபாவளிக்கு கொடுக்கலாம்னு திட்டம் வச்சாலும் வச்சிருப்பார் ..கலைஞர்
-பனையேறி
http://panaiyeri.blogspot.com
வெட்கப்படாமல் தைரிய ஆண்மகன்களாக முதலில் பின்னூட்டம் இட்ட விஜய் ஆனந்த் மற்றும் பனையேறிக்கு நன்றி !
ஹஹஹ...
நல்ல அவதானிப்பு..
வெட்கப்பட்டுக் கொண்டே பின்னூட்டம் இட்டுச் செல்கிறேன் பதிவை படித்த அடையாளமாக...
ஹி ஹி பதிவை கண்ணாபின்னான்னு வழி மொழிகிறேன்.
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))
நல்ல பதிவு....
//ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))//
சிரித்துக் கொண்டிருக்கிறேன் :)))
//குசும்பன் said...
ஹி ஹி பதிவை கண்ணாபின்னான்னு வழி மொழிகிறேன்.
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))
//
ம் எதுக்கா ? எனக்கு தெரிஞ்சதை ஊகமாகச் சொல்கிறேன், மின்சார தடை ஏற்பட்டால் ஆணுறையை எங்கே மறைவாக வைத்திருக்கிறோம் என்று தேடி எடுப்பதற்காக இருக்கும்.
:)
//ஜி said...
நல்ல பதிவு....
//ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))//
சிரித்துக் கொண்டிருக்கிறேன் :)))
12:40 PM, October 06, 2008
//
மேலே உள்ள பின்னூட்டத்தைப் பாருங்க ஜி
//VIKNESHWARAN said...
வெட்கப்பட்டுக் கொண்டே பின்னூட்டம் இட்டுச் செல்கிறேன் பதிவை படித்த அடையாளமாக...
12:16 PM, October 06, 2008
//
விக்கி,
கல்யாணம் ஆகாத சின்னப் பசங்க தள்ளி நின்னுதான் பார்கனும்
:)
//'டொன்' லீ said...
ஹஹஹ...
நல்ல அவதானிப்பு..
11:55 AM, October 06, 2008
//
'டொன்' லி நன்றி !
விட்டா, ஆ.உரை வாங்கிக் கொடுக்க 'பெருசுங்க' குழு ஒன்று அமைத்து, சின்ன பசங்களுக்கு 'கூச்சமீல்லாம' வாங்கிக் குடுப்பீங்க போலருக்கே.
'அனானி ஆப்ஷன் இல்லாததா, முக்காடுடன் 'சர்வேசன்'
;)
//SurveySan said...
விட்டா, ஆ.உரை வாங்கிக் கொடுக்க 'பெருசுங்க' குழு ஒன்று அமைத்து, சின்ன பசங்களுக்கு 'கூச்சமீல்லாம' வாங்கிக் குடுப்பீங்க போலருக்கே.//
பசங்களுக்கு இல்லை, நான் இங்கே சொல்வது திருமணமான ஆண்களுக்கு 'அச்சம் தவிர்' அட்வைஸ் மட்டுமே.
//
'அனானி ஆப்ஷன் இல்லாததா, முக்காடுடன் 'சர்வேசன்'
;)
//
:)
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to
valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
Let's show your thoughts to the whole world!
இந்த மேட்டர பத்தின விழிப்புணர்வு குறைவுதாங்க இதுக்கு காரணம்...மற்றபடி வெட்கம் எல்லாம் ஜஸ்ட் சைக்காலாஜிக்கல் இஷ்யு....
நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது முதல் முறை ஆணுறை வாங்கச் சென்றேன், மிகத் தைரியமாகச் சென்று கடை காரரிடம் சொல்லி வாங்கினேன். ஏனென்றால் அப்போது எங்கள் காரின் டீசல் ட்யூபில் ஒரு சிறு பொத்தல் ஏற்பட்டு டீசல் ஒழுக ஆரம்பித்தது. உடனே ஒரு பாக்கெட் ஆணுறை வாங்கி அதை நெருப்பில் காட்டி அப்படியே டீசல் ட்யூபின் மேல் வைத்து ஒட்டி தற்காலிகமாக பிரச்சனையை சரி செய்து திருச்சி சென்றோம். அப்ப எல்லாம் நான் வெட்கப்படவேயில்லை என்பதை இப்போதும் வெட்கப்படாமல் தெரிவித்துக் கொள்கிறேன்.
//வாங்குவதற்கு இவ்வளவு தயக்கம் காட்டும் நம்மக்கள் மக்கள் தொகையை இந்த அளவுக்கு உயர்த்தி இருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. //
உங்கள் கேள்வி தான் முரண்பாடாக இருக்கிறது ..வாங்குவதற்கு தயக்கம் காட்டியதால் தான் நம் மக்கள் மக்கள் தொகையை இப்படி உயர்த்தி விட்டிருக்கிறார்கள் .
//ஜோ / Joe said...
உங்கள் கேள்வி தான் முரண்பாடாக இருக்கிறது ..வாங்குவதற்கு தயக்கம் காட்டியதால் தான் நம் மக்கள் மக்கள் தொகையை இப்படி உயர்த்தி விட்டிருக்கிறார்கள் .
//
சரியான பாயிண்ட் ! அங்க நிக்கிறார் ஜோ ! எல்லோரும் 'ஜோ'வுக்கு 'ஓ' போடுங்க !
:)
//ஜோசப் பால்ராஜ் 1:55 PM, October 06, 2008
நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது முதல் முறை ஆணுறை வாங்கச் சென்றேன், மிகத் தைரியமாகச் சென்று கடை காரரிடம் சொல்லி வாங்கினேன். ஏனென்றால் அப்போது எங்கள் காரின் டீசல் ட்யூபில் ஒரு சிறு பொத்தல் ஏற்பட்டு டீசல் ஒழுக ஆரம்பித்தது. உடனே ஒரு பாக்கெட் ஆணுறை வாங்கி அதை நெருப்பில் காட்டி அப்படியே டீசல் ட்யூபின் மேல் வைத்து ஒட்டி தற்காலிகமாக பிரச்சனையை சரி செய்து திருச்சி சென்றோம். அப்ப எல்லாம் நான் வெட்கப்படவேயில்லை என்பதை இப்போதும் வெட்கப்படாமல் தெரிவித்துக் கொள்கிறேன்.
//
பால்ராஜ்,
உங்களுக்கு பாலமுருகன் என்று பெயர் வைத்திருக்கலாம், பிஞ்சிலே பழுத்த ஞானப்பழம் !
:)
//Rex said...
இந்த மேட்டர பத்தின விழிப்புணர்வு குறைவுதாங்க இதுக்கு காரணம்...மற்றபடி வெட்கம் எல்லாம் ஜஸ்ட் சைக்காலாஜிக்கல் இஷ்யு....
1:38 PM, October 06, 2008
//
Rex, நன்றி !
நீங்கள் சொல்வதும் சரி தான்.
வெளி நாடுகள்ல எல்லாம் வென்டிங் மெஷின் வச்சு கொடுக்கிறாங்க ...
அந்த நிலைமை இங்க வந்தா ஒரு வேளை கூச்சம் மாறலாம்.
அப்ப கூட நம்ம ஆளுங்க, சுற்றி யாரும் இல்லாத மெசினை தேடி ஓடக் கூடும்.
ஒரு காலத்துல ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல இலவசமாவே கொடுத்தாங்க...
அத வாங்கி நம்ம மக்கள் பயன்படுத்தாம, அவங்க குழந்தைகளுக்கு பலூன் ஊத கொடுத்ததா கேள்விப்பட்டுருக்கேன்.
இது கூட மக்கள் தொகை நூறு கோடியை தாண்டியதற்கு ஒரு காரணமா இருக்கலாம்.
இதை பொறுத்தவரை மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. ஒரு விழிப்புணர்வு பெற்றவனாக இதில் கமெண்ட்ட வெக்கப்படவில்லை.
//நவநீதன் said...
வெளி நாடுகள்ல எல்லாம் வென்டிங் மெஷின் வச்சு கொடுக்கிறாங்க ...
அந்த நிலைமை இங்க வந்தா ஒரு வேளை கூச்சம் மாறலாம்.
அப்ப கூட நம்ம ஆளுங்க, சுற்றி யாரும் இல்லாத மெசினை தேடி ஓடக் கூடும்.
//
:))
//ஒரு காலத்துல ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல இலவசமாவே கொடுத்தாங்க...
அத வாங்கி நம்ம மக்கள் பயன்படுத்தாம, அவங்க குழந்தைகளுக்கு பலூன் ஊத கொடுத்ததா கேள்விப்பட்டுருக்கேன்.
//
திரையரங்கில் திடிரென ஊதிப்பறக்கவிட்ட அலம்பல் பண்ணுவாங்க பார்த்திருக்கிறேன்
//இது கூட மக்கள் தொகை நூறு கோடியை தாண்டியதற்கு ஒரு காரணமா இருக்கலாம்.
இதை பொறுத்தவரை மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. ஒரு விழிப்புணர்வு பெற்றவனாக இதில் கமெண்ட்ட வெக்கப்படவில்லை.
3:19 PM, October 06, 2008
//
நவநீதன் மிக்க நன்றி ! சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.
//'முடிந்த' ஆண்களுக்குத்தானே ஆணுறை தேவை, வாங்கும் போது 'என்னால் முடியும்' என்ற நினைப்பின் உற்சாகம் இருந்தால் ஆணுறை வாங்கப் போகும் போது கூச்சம் கண்டிப்பாக வராது ! :)//
ரசித்தேன் :)
நாகை மருத்துவமனைக்கு எதிரில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு நண்பர் சொன்னார்.. இந்த மாதிரி பொருள்களை வாடிக்கையாளர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருப்பாராம். அவரவருக்கு வேண்டியதை அவரவரே எடுத்துக் கொண்டு காசை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வார்களாம்.
இந்த மேட்டர பத்தின விழிப்புணர்வு குறைவுதாங்க அதனாலதான் இன்று மக்கள் தொகை நூறு கோடி.
வெளி நாடுகள்ல இன்று பிறப்பு விகிதம் மிக குறைவு... சிங்கை போன்ற நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி வேகம எப்படி அதிகரிப்பது என்று மண்டைய பிச்சிகிட்டு போனஸ் எல்லாம் கொடுக்கபடுகின்றது.
அதானலா நம்ம வெட்கப்பட்டுக் கொண்டே போட்டு தாக்குவோம்.
மனிதா சக்தி இந்த உலககுக்கு தேவை...
இந்திய மக்கள் தொகை 2045இல் சமநிலைப்படும்
வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி, 2006 உடன் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளில் 1.6 விழுக்காடாக இருந்தது. இது 2026 உடன் முடிவடையும் ஐந்து ஆண்டுகளில் 0.9 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு மே மாதத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொகைக்கான தேசிய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு அறிக்கை இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாகப் பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை, 2001 கணக்கெடுப்பில் 1029 மில்லியனாக இருந்தது, 2006இல் 1112 மில்லியனாக கூடியுள்ளது. இது 2026இல் 1400 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 2006இல் 62.9 சதமாகவும், 2026இல் 68.4 சதமாகவும் கூடியுள்ளது.
இனப்பெருக்க வயது வரம்பைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மொத்த மக்கள் தொகை அடுத்த 25 - 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரித்து, 2045ஆம் ஆண்டுவாக்கில் நிலைத்தன்மை பெறும்.
திரு பைசால் விசயகாந்து உங்க பின்னூட்டத்த படிச்சா அடுத்த படத்துக்கு சூப்பர் மேட்டர் மாட்டிருச்சினு ரொம்ப சந்தேஷ படுவாருங்க...
//சலாஹுத்தீன் 4:30 PM, October 06, 2008
ரசித்தேன் :)
//
நன்றி
//நாகை மருத்துவமனைக்கு எதிரில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு நண்பர் சொன்னார்.. இந்த மாதிரி பொருள்களை வாடிக்கையாளர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருப்பாராம். அவரவருக்கு வேண்டியதை அவரவரே எடுத்துக் கொண்டு காசை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வார்களாம்.
//
சலாஹுத்தீன்
என்னது எங்க ஊர் பெயரை சத்தமில்லாமல் சொல்கிறீர்கள். நாகையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான்
:)
//சலாஹுத்தீன்
என்னது எங்க ஊர் பெயரை சத்தமில்லாமல் சொல்கிறீர்கள். நாகையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான்//
நான் எங்க ஊர்ப் பெயரைத்தானே சொன்னேன்?
நானும் நாகப்பட்டினத்துக்காரன்தான்!
//சலாஹுத்தீன் said...
நான் எங்க ஊர்ப் பெயரைத்தானே சொன்னேன்?
நானும் நாகப்பட்டினத்துக்காரன்தான்!
//
அடடே ரொம்ப நெருங்கிட்டோமே, நான் வெளிப்பாளையம், ஏழைப்பிள்ளையார் கோவில் பக்கக்தில்
இப்ப அலுவலக நேரம் முடிந்துவிட்டது, இன்னும் 3 மணி நேரத்தில் பதிவைப் பார்ப்பேன்
மெயில் போடுங்க govikannan at gmai dot com
:)
//நண்பரின் மருந்து கடைக்குச் செல்லும் போது இந்த காட்சிகளையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன்//
அது சரி.. உங்களுக்கு இருக்கிற மாதிரியே எல்லோருக்கும் மெடிக்கல் ஷாப் ஓனர் நண்பரா இருந்தா பிரச்சனை இல்லை.. அவர பார்க்கப் போவது போல் போய் ஜோலிய முடிச்சிட்டு வந்துடுவாங்க.. :))
:)))
அப்பிடி ஒன்னும் வெக்கப்படலையே பாஸ்!!
:)))
டார்ச் லைட் வாங்கினா காண்டம்ஸ் ஃப்ரீயா???
எத்தினி டார்ச் லைட் தான் வாங்குறது!?!?!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
குசும்பன் said...
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))
//
அதானே எதுக்கு!?!?!?
:))))))))))))))))))))))
//மங்களூர் சிவா said...
//
குசும்பன் said...
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))
//
அதானே எதுக்கு!?!?!?
:))))))))))))))))))))))//
இதென்ன கேள்வி.. சின்னப் புள்ளத் தனமா?
டிவிடி ப்ளேயர் வாங்கினா போட்டுபாக்க சில சினிமா டிவிடிக்கள் தரதில்லையா? அந்த மாதிரியாக்கும்..
... ஹ்ம்ம்ம்.. இதுங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு.. :)))))
மக்களுக்கு இந்த விசயத்தில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை.
//மங்களூர் சிவா said...
மக்களுக்கு இந்த விசயத்தில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை//
டார்ச் லைட் விஷயத்துலையா? :))))))))
//
பொடியன்-|-SanJai said...
//மங்களூர் சிவா said...
//
குசும்பன் said...
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))
//
அதானே எதுக்கு!?!?!?
:))))))))))))))))))))))//
இதென்ன கேள்வி.. சின்னப் புள்ளத் தனமா?
டிவிடி ப்ளேயர் வாங்கினா போட்டுபாக்க சில சினிமா டிவிடிக்கள் தரதில்லையா? அந்த மாதிரியாக்கும்..
... ஹ்ம்ம்ம்.. இதுங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு.. :)))))
//
கொய்யால
வெளிச்சத்துல எதுக்குய்யா டார்ச்!?!?
//
பொடியன்-|-SanJai said...
//மங்களூர் சிவா said...
மக்களுக்கு இந்த விசயத்தில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை//
டார்ச் லைட் விஷயத்துலையா? :))))))))
//
contraceptive methods ல தமிழ்ல என்னப்பா கு.க- ல
//
VIKNESHWARAN said...
வெட்கப்பட்டுக் கொண்டே பின்னூட்டம் இட்டுச் செல்கிறேன் பதிவை படித்த அடையாளமாக...
//
ரொம்ப வெக்கப்படாதீங்க பாஸூ இது ஆம்பளைங்க சமாச்சாரம்தானே!!
:))
//
கொய்யால
வெளிச்சத்துல எதுக்குய்யா டார்ச்!?!?//
ச்சி..ச்சி.. கர்மம்.. வெளிச்சத்துலயேவா?..:))))
.. ராத்திரி நேரத்துல தான் வாங்க போவாங்க.. அதை சொன்னேன்.. :))
//VIKNESHWARAN said...
வெட்கப்பட்டுக் கொண்டே பின்னூட்டம் இட்டுச் செல்கிறேன் பதிவை படித்த அடையாளமாக...
//
என்னாது வெக்கப் பட்டுக் கொண்டேவா? அடப்பாவி.. ஆன் தி வே ல கமெண்ட் போட்டு போறியா நீ?.. ஆல் த பெஸ்ட் ராசா:))
எங்க ஊர் ரேஷன் கடைல ஃப்ரீயா வித்தும் வாங்க ஆளிளாததால அதை வெளிய வீசிடுவாங்க.. நாங்க அதை கொண்டு வந்து தண்னீர் பைப்ல மாட்டி தண்ணி நிரப்பி பலூன் மாதிரி வச்சி விளையாடுவீம்.. அப்போ எலலாம் நான் வெக்கப் படவே இல்லை என்பதை வெக்கப் படாமல் சொல்லிக்கிறேன்..
...இது ஜோசப் பால்ராஜ்க்கு எதிர் பின்னூட்டம் இல்லை.. :))
//
பொடியன்-|-SanJai said...
ச்சி..ச்சி.. கர்மம்..
//
இப்பிடி சொல்லி சொல்லித்தான்யா இந்திய மக்கள்தொகை 133 கோடி
:)))
//
பொடியன்-|-SanJai said...
.. ராத்திரி நேரத்துல தான் வாங்க போவாங்க.. அதை சொன்னேன்.. :))
//
டார்ச் லைட் வாங்க ராகுகாலம் என்ன எமகண்டம் என்ன???
:))
//
பொடியன்-|-SanJai said...
//VIKNESHWARAN said...
வெட்கப்பட்டுக் கொண்டே பின்னூட்டம் இட்டுச் செல்கிறேன் பதிவை படித்த அடையாளமாக...
//
என்னாது வெக்கப் பட்டுக் கொண்டேவா? அடப்பாவி.. ஆன் தி வே ல கமெண்ட் போட்டு போறியா நீ?.. ஆல் த பெஸ்ட் ராசா:))
//
ரிப்பீட்டு
ஒரு ரூபாய் அரிசி வாங்கும்போதே ..அந்த மாதத்திற்கான ஆணுறையும் இலவசமாக ரேஷன் கடைகளில் கொடுக்கலாம்.
கோவியாரே!
அனுபவப் பகிர்வுக்கு நன்றி! உங்க trademark கருத்தை உரத்து சொல்லாம விட்டதிலிருந்து நல்லா தெரியுது, நீங்களும் வெட்கப்பட்டுக்கிட்டுதான் வாங்கி இருப்பீங்கன்னு.
சிங்கையில் எங்கே கிடைக்கும்?, உபரித் தகவல். பதின்ம வயதினருக்குக் கூடத் தெரிந்த விடயம்.
தமிழகத்தில் திருமணம் ஆனவர்களுக்கே எங்கு வாங்குவது என்று தெரியாது.(பெரும்பாலானவர்களைச் சொல்கிறேன்)
ஆணுறை பற்றி எழுதிய கோவியார் -இவ்வையத்துள்
வானுறையும் வைக்கப்படுவார்.
அப்பத்தான் நம்ம நாட்டின் மக்கள் தொகை சீரான வளர்ச்சியோட இருக்கும்.
//ம் எதுக்கா ? எனக்கு தெரிஞ்சதை ஊகமாகச் சொல்கிறேன், மின்சார தடை ஏற்பட்டால் ஆணுறையை எங்கே மறைவாக வைத்திருக்கிறோம் என்று தேடி எடுப்பதற்காக இருக்கும்.
:)//
மின்சார தடை ஏற்பட்டால் ஆணுறை மாட்ட கூட இருக்கலாம்
//ஒரு காலத்துல ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல இலவசமாவே கொடுத்தாங்க... //
இன்று வரை இலவசம் தான். இப்பொழுது ஆணுறை முனை (condom corner) என்று பெட்டிகளில் ஆணுறைகள் வைக்கப்பட்டு அது மருத்துவமனைகளின் பல இடங்களிலும் (முக்கியமாக மக்கள் காத்திருக்கும் இடங்கள்) வெளிப்படையாக வைக்கப்பட்டிருக்கும்.
தேவைப்படுபவர்கள் யாரிடமும் கேட்காமல் அதை எடுத்து செல்லலாம் என்பதற்காக தான் இந்த திட்டம்
//அத வாங்கி நம்ம மக்கள் பயன்படுத்தாம, அவங்க குழந்தைகளுக்கு பலூன் ஊத கொடுத்ததா கேள்விப்பட்டுருக்கேன்.//
உண்மைதான். 99 பேர் பலூன் ஊதினாலும் ஒருவர் பயன்படுத்தினால் போதும் என்பது அரசின் எண்ணம்
--
எதாவது அரசு மருத்துவமனையில் ஆணுறை முனை இல்லை என்றால் என் பதிவின் மறுமொழிகளில் தெரிவிக்கவும். பொது சுகாதாரத்துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்
50
//மங்களூர் சிவா 10:10 PM, October 06, 2008
50
//
சிவா,
புதுசா கல்யாணம் ஆன ஆளு நீ, இங்கே என்ன பண்ணுறே.........?
அண்ணே ஆன்லைன்ல இருந்தா ஆப்பீஸ்ல இருக்கேன்னு அர்த்தம்!!
4 - 11 ஷிப்ட்
நான்லாம் வெக்கப்பட்டதே இல்லைப்பா.. (அது இல்லைங்கறது வேற விஷயம்)
//தாமிரா said...
நான்லாம் வெக்கப்பட்டதே இல்லைப்பா.. (அது இல்லைங்கறது வேற விஷயம்)
//
தாமிரா,
இப்ப இதுக்கு யாராவது உங்களை ஓட்டினால் நான் பொறுப்பு இல்லை.
:)
oooo இதுக்கெல்லாம் ஆண்கள் வெட்கப்படுவார்களா - சரி சரி - கோவி சொன்னா சரியாத்தானிருக்கும்
ஹிஹி..
அட வெட்கப்பட்டுக்கொண்டே பின்னூட்டம் போடுறேன்னு சொல்லிகிறேன்..
//
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))//
புள்ளைக்கு என்னமா டவுட் வருது பாரு..
ஹிஹி.. தல டார்ச் லைட் பேட்டரியோட தருவாங்களா இல்ல பேட்டரி இல்லாம தருவாங்களா?
ஒரு பேட்டரி டார்ச் லைட்டா இல்லா நாலு பேட்டரி லைட்டா? ஹிஹி.. எல்லாம் ஒரு பொது அறிவுக்காக தான்.
நல்லா வெக்கப்படுங்கப்பா.
நாந்தான் குடுகுடுப்பை வேற பேர்ல வந்துருக்கேன்.
சஞ்ஜெயின் கும்மி,
பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only
டாக்டர் புருனோ சாருக்கு....
சர்தர்ஜிக்கு ஆணுறைய எப்படி உபயோகிக்கிறதுனு டாக்டர் சொல்லிக் கொடுத்த கதை தெரியுமா உங்களுக்கு? :)
//படிக்கத் தவறாதீர்கள் :
பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only - பொடியன்--SanJai//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//cheena (சீனா) said...
oooo இதுக்கெல்லாம் ஆண்கள் வெட்கப்படுவார்களா - சரி சரி - கோவி சொன்னா சரியாத்தானிருக்கும்
12:08 AM, October 07, 2008
//
சீனா ஐயா,
ஆண்கள் வாய்ச் சொல்லிலும் வீரர்கள் தானே. :)
//சந்தோஷ் = Santhosh said...
ஹிஹி..
அட வெட்கப்பட்டுக்கொண்டே பின்னூட்டம் போடுறேன்னு சொல்லிகிறேன்..
//
ஆமாம் டார்ச் லைட் எதுக்குங்க இலவசமா கொடுக்கிறாங்க:)))//
புள்ளைக்கு என்னமா டவுட் வருது பாரு..
ஹிஹி.. தல டார்ச் லைட் பேட்டரியோட தருவாங்களா இல்ல பேட்டரி இல்லாம தருவாங்களா?
ஒரு பேட்டரி டார்ச் லைட்டா இல்லா நாலு பேட்டரி லைட்டா? ஹிஹி.. எல்லாம் ஒரு பொது அறிவுக்காக தான்.
//
Santhosh,
பெங்களூரில் இருப்பவர்களிடம் தான் கேட்கனும். எனக்கு தெரியலை, சென்று வர செலவு ஆகும், அதுக்கு 100 டார்ச் லைட் வாங்கிடலாம். உங்கள் பொது அறிவுக்கு நான் அவ்வளவு பண(ய)ம் வைக்க முடியாது.
//வருங்கால முதல்வர் said...
நல்லா வெக்கப்படுங்கப்பா.
நாந்தான் குடுகுடுப்பை வேற பேர்ல வந்துருக்கேன்.
//
குடுகுடுப்பை, வருங்கால முதல்வர் யாருன்னு சொல்லுவிங்களா ?
விஜய், அஜித், சிம்பு ?
// புதுகை.அப்துல்லா said...
டாக்டர் புருனோ சாருக்கு....
சர்தர்ஜிக்கு ஆணுறைய எப்படி உபயோகிக்கிறதுனு டாக்டர் சொல்லிக் கொடுத்த கதை தெரியுமா உங்களுக்கு? :)
//
புருனோவை கலாய்க்கிறிங்களா ?
அவரைச் சுற்றி படையோடு இளைஞர்கள் இருக்காங்க !
அந்த படை இல்லை. :)
//பொடியன்-|-SanJai said...
//படிக்கத் தவறாதீர்கள் :
பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only - பொடியன்--SanJai//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
6:08 PM, October 08, 2008
//
எல்லாம் 2 பக்கம் வெளம்பரம் தான்.
:)
முதல் முறை வாங்கும்போது இருந்த தயக்கம்.. வெட்கம் இன்னும் இருக்குது. ஆனா சின்ன வயசுல அதை பலூன் மாதிரி ஊதி விளையாடும் போது வெட்கம் வரலை.
Post a Comment