3 செப்டம்பர், 2008

காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா...



படம் : அமர்களம் ( ஆண்டு 1999)
நடிப்பு : தல அஜித், ஷாலினி, நாசர், ரகுவரன் மற்றும் இயக்குனர் சரண் படத்தில் எப்போதும் வரும் சார்லி, தாமு, வையாபுரி, வினு சக்ரவர்த்தி
இசை : பரத்வாஜ்

அஜித் - ஷாலினி இல்லற வாழ்விலும் இணைந்தது இந்த படத்தினால் தான்..... முன்பெல்லாம் அடிக்கடி கேட்கும் பாடல் இது...ராகவேந்திரா லாரன்ஸ் நடன இயக்குனராக களமிறங்கி இந்த பாடல் மூலம் பெரும் பெயர் பெற்றார். பிள்ளையார் பின்னனியுடன் கலக்கலான பாடல்.

எனது சென்னை நாட்களின் ஆரம்ப காலத்தில் மேற்கு சைதையில் தங்கி இருந்த போது (1989) , பாடல் எடுக்கப்பட்ட மாம்பலம் சீனிவாசா திரையரங்கில் தங்கமகன் உட்பட பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது பாடலைக் கேளுங்க....
காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா...
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப் போச்சுடா...
மகா...கணபதி....!

கொழுக்கட்டை செய்யும் அத்தனை பதிவர்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !

பிள்ளையார் சதுர்த்திக்கான சிறப்பு பதிவு ஏற்கனவே போட்டாச்சு !

7 கருத்துகள்:

  1. நம்மவீட்டுலே கலிகாலக் கொழுக்கட்டை ரெடி.

    வாங்க.

    பதிலளிநீக்கு
  2. \
    கொழுக்கட்டை செய்யும் அத்தனை பதிவர்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் !
    \

    யாருமே கொழுக்கட்டை தர மாட்டேங்கிறாங்கப்பா...:)

    பதிலளிநீக்கு
  3. எனக்கு புடிச்ச பிள்ளையார் பாட்டு , அதுவும் அஜீத் படம் தான் , படம் பெயர் நினைவுல இல்ல. லியோ கப்பாஸா...... பிள்ளையர்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாட்டுத்தான் .

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !