20 ஆகஸ்ட், 2008

சுண்டல் !

அவியல் பதிவுகளை நண்பர்கள் போடுகிறார்கள். சிற்றுண்டி வகையில் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்போமே. அவியல் பதிவுகளில் பா.கே.ப சாயலில் எழுதுகிறார்கள். இதைக் கொஞ்சம் க.போ.யா ( கலக்கப் போவது யாரு பாணியில் நகைச்சுவையாக எழுத முயற்சிக்கிறேன். சிரிப்பு வரலைன்னா, ரொம்ப கவலையை விடுங்க. நம்ம சாதி வெட்டிப்பயல் பாலாஜி (பதிவர் சாதிதானுங்க) பதிவு பக்கம் எட்டிப் பாருங்க, உண்மையிலேயே நகைச்சுவையில் கலக்குபவர் அவருதான். நகச்சுவையில் கொஞ்சம் யோசித்தால் ஐ மீன் நகத்தைக் கடிச்சிக்கிட்டே யோசித்துப் பார்த்து....

நடிகர்கள் கடற்கரையில் சுண்டல் விற்றால் ? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் சுண்டல் விற்பதைப் பற்றி கேட்ப்போம்.

கோவி : சூப்பர் ஸ்டார் ரஜினி சார், நேற்று நீங்கள் விற்ற சுண்டல் சூப்பர் சுண்டல் என்று வித்திங்களே, உண்மையில்யே அது சூப்பர் சுண்டலா ?

ரஜினி : ஹா...ஹ்ஹா..ஹா...யாரோ செஞ்ச சுண்டல நான் இங்கே வந்து விக்கிறேன். அத நான் செஞ்ச சுண்டலாக நீங்க தான் நெனக்கிறிங்க, இன்னிக்கு நல்ல சுண்டலோடு வந்திருக்கன் இது நல்ல சுண்டல். மக்கள் இதை வாங்கித் தீர்கணும், நல்ல சுண்டலை ஆண்டவனே கைவிட்டாலும் மக்கள் கைவிட்டுட மாட்டாங்க

கோவி ; மனதுக்குள்...இன்னிக்கு மட்டு இவரே செஞ்ச சுண்டலாக்கும்...

*******

கோவி : கமல் சார், உங்க சுண்டல் தான் இப்ப நல்லா போகுதாமே ... ஆனால் ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையே.
கமல் : நான் 5 வயதிலிருந்து சுண்டல் விக்கிறேன்...சுண்டலை எப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு எனக்கு தெரியும்...கொண்டக்கடலை சுண்டல் ஒருவகைதான் செய்யமுடியும்னு பலர் நினைக்கிறாங்க...நான் ஒரே கொண்டக்கடலையில் 10 வகையான சுண்டல் செய்திருக்கேன். பார்த்திங்க என்றால் அது கொண்டக்கடலை சுண்டலான்னு தெரியாது. அமெரிக்கா சமையக்காரர் தான் சுண்டலுக்கு மசாலா அரைக்கிறார். என்ன கேட்டிங்க ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையா ? ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லைன்னு யார் சொன்னது ? இருந்தால் நல்லா இருக்கும்னு தானே எல்லோரும் நினைப்பாங்க ? இப்படித்தான் சண்முகி மாமி...

கோவி: (எஸ்கேப்) ஐயோ சாமி...

*********

கோவி : இளைய தளபதி....வணங்கங்ணா... அவங்களாவது சுண்டல் விற்கிறாங்க...நீங்க நமத்துப்போன முறுக்கை சுண்டல்னு சொல்லி விக்கிறிங்களே எப்படிங்கண்னா

விஜய் : அப்படிங்களான்னா...அப்பா இருக்காருங்களே அவருதான்னா முறுக்கைக் கூட சுண்டல்னு விக்கலாம்னு சொன்னார். சுண்டல் என்னங்கண்னா சுண்டல், ஒரு குத்துப்பாட்டோ ஊசிப்போன போண்டாவைக் கூட விக்கலாங்கண்னா...ஏன்னா இங்கதான் வலைபதிவாளர்கள் சந்திக்கிறாங்க

கோவி : போண்டா மேட்டரு இஸ்டாருங்களுக்குக் கூட தெரிஞ்சு போச்சு

*********

கோவி : தல...பழைய சரக்கை சுடவெச்சு சூப்பராக தள்ளிவிடுறங்களே...உங்க சுண்டலும் வியாபாரம் ஆகிடுதாமே

அஜித் : சுண்டல் விக்கறது பெரிசுல்ல...நாம அதை எப்படி விக்கிறம்ங்கிறது தான் பெரிசு...கெட்டப்போடு விக்கனும் ...கெட்ட சுண்டலை வித்துடக் கூடாது...பழைய சரக்கானாலும் பதமாக இருந்தால் விக்கலாம்.

கோவி : எனக்கு இப்ப விக்குது !

*******

கோவி : குழந்தை தியா எப்படி இருக்கா ? உங்க சுண்டல் இப்பெல்லாம் ஏன் சரியாக போகல மிஸ்டர் சூர்யா ?

சூர்யா : முன்பெல்லாம் விக்கிறது சுண்டல் தானான்னு நானே தெரிஞ்சிக்க உடம்பு முழுவதும் 'சுண்டல்' 'சுண்டல்' னு பச்சக் குத்திக்குவேன். மறக்காமல் எல்லாத்தையும் வித்துடுவேன். கல்யாணம் ஆனதும் காலேஜ் பொண்ணுங்க சுண்டல் வாங்குவது குறைஞ்சிட்டு...நாளைக்கு நான் விக்கிற சுண்டலோட வாசனை மியாமி பீச் வரைக்கும் தெரியும்.

கோவி : மூக்கைப் பிடித்துக் கொண்டே .... கெட்டுது போ......

*******

கோவி : விக்ரம் சார்.....ஆரிச்சாமி சுண்டல், அந்நியன் சுண்டல் னு நல்லா வித்துக்கிட்டு தானே இருந்திங்க..


விக்ரம் : ம்ம்..எங்கிட்ட சுண்டலைக் கொடுத்து விக்கச் சொன்னவங்களெல்லாம் நான் நல்லா விக்கிறேன் என்று தான் கொடுத்தாங்க...நல்ல சுண்டலைக் கொடுக்கல...இப்ப சுண்டல் வாங்கி விக்கும் போது சரக்கு நல்லா இருந்தான் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு பீச்சில வந்து பாருங்க கந்தசாமின்னு ஒருத்தன் சுண்டல் விப்பான்

கோவி : ஐயோ நாளைக்கு பீச்சுப்பக்கம் வந்து வேறு யாரும் வாங்கினால் நானும் வாங்குறேன்

*******

கோவி : சிம்பு தம்பி...

சிம்பு : என்ன கேக்கப் போறிங்க ? அவங்க சுண்டல் வேகமாக விக்குதேன்னு தானே...முதலில் யார் வேகமாக சுண்டல் விக்கிறாங்கங்கங்கிறது முக்கியமில்லே...கடைசியில யாரு வித்து முடிக்கிறாங்கங்கிறதுதான் வியாபார வெற்றியே..இன்னிக்கு நாலு பேரு அவங்க சுண்டல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா என் சுண்டல் விக்காம போய்டுமா ? நல்ல சுண்டலை வாங்கிட்டு வந்து விக்கிறது பெரிசு இல்லை. நல்ல சுண்டலை நாமே செஞ்சு விக்கெனும்...

சொல்லிக் கொண்டே விரலை சொடுக்க அவர் வைத்திருக்கும் சுண்டல் பாத்திரம் நழுவி பீச் மணலில் தலைகீழாக விழுகிறது

******

கோவி : உங்க சுண்டல் மட்டும் ஏன் விக்கும்னு சரியாகவே சொல்ல முடியல ?

தனுஷ் : இத பாருங்க நான் என்ன விக்கிறேன்னு எனக்குத் தெரியாது...எங்க அண்ணனும், அப்பாவும், சுண்டல் செய்றவங்களும் என்ன சொல்லி விக்கச் சொல்றாங்களோ அதை விப்பேன். முந்தா நேத்திக்கு நல்லா இருந்தது...நேத்திக்கு நல்லா இல்லை...இன்னிக்கு நல்லா இருக்கு. ஏத்த இறக்கம் வியாபாரத்துல இருக்கும்.

கோவி : தத்துவம் பேசுவதில் மாமனார் தோற்றாரு போங்க...


*****

ரூம் போட்டு யோசிச்சி...மூடு இருந்தால் நாளைக்கு அரசியல் வாதிகள் விற்கும் சுண்டலைப் பற்றி கேட்போம்.

35 கருத்துகள்:

  1. > நல்லா இருந்தது.
    > கலக்கீட்டீங்க G.K
    > வயிறு வலிக்கச் சிரித்தேன்.
    > கண்ணில் நீர் வரச் சிரித்தேன்
    > பக்கத்து கேபினில் இருப்பவர் திரும்பிப் பார்க்குமளவுக்கு வாய்விட்டுச் சிரித்தேன்..
    >:)
    >:)))

    மேலே இருப்பதில் உங்களுக்குப் பிடித்ததை என் பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும்... :P

    பதிலளிநீக்கு
  2. பக்கத்து கேபினில் இருப்பவர் திரும்பிப் பார்க்குமளவுக்கு வாய்விட்டுச் சிரித்தேன்..

    பதிலளிநீக்கு
  3. ஹைய்யோ ஹைய்யோ:-))))

    //சொல்லிக் கொண்டே விரலை சொடுக்க அவர் வைத்திருக்கும் சுண்டல் பாத்திரம் நழுவி பீச் மணலில் தலைகீழாக விழுகிறது//

    இது சூப்பர்:-))))))) lol

    பதிலளிநீக்கு
  4. கோவி அண்ணே ரஜினி வழி எப்பவுமே தனி வழி...அதனால சுண்டல் விற்பதில் இருந்து விலக்கு அளித்து...அவல்(குசேலன் அவல்) விற்குமாறு சொல்லவும்...வியாபாரம் அமோகமா ஆகும்:)

    பதிலளிநீக்கு
  5. //நிஜமா நல்லவன் said...
    கோவி அண்ணே ரஜினி வழி எப்பவுமே தனி வழி...அதனால சுண்டல் விற்பதில் இருந்து விலக்கு அளித்து...அவல்(குசேலன் அவல்) விற்குமாறு சொல்லவும்...வியாபாரம் அமோகமா ஆகும்:)//

    வழி மொழிகிறேன்:)

    பதிலளிநீக்கு
  6. பிளாக் படிக்காமலே கும்மறதுனா என்னானு தெரியுமா உங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  7. அனானி ஆப்ஷன் கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. ஓ இது கோவி.அண்ணன் இடமா.... நேராக வந்தனால ஜெகதீசன் இடம்னு நினைச்சிட்டேன்...

    பதிலளிநீக்கு
  9. கோவி அண்ணா விக்கி அண்ணன் மாடரேஷன் எடுக்க சொல்லுறாரு!

    பதிலளிநீக்கு
  10. ஏன்னு கேட்குறிங்களா? ஏன்னா ஜெகதீசந்தானே அவருக்கு அவரே முதல் பின்னூட்டம் போட்டுக்குவாரு....

    பதிலளிநீக்கு
  11. ஜெகதீசன் கொடுத்திருக்கும் பின்னூட்ட ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால் உலகம் முழுதும் தீக்குளிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  12. நிஜமா நல்லவன் அதை ஆரம்பித்து வைப்பார்...

    பதிலளிநீக்கு
  13. இங்க கும்மி அடிக்க வரச்சொல்லிவிட்டு வேலை இருப்பதாக சொல்லி தட்ஸ் தமிழ் படிக்கும் ஜெகதீசனுக்கு கண்டங்கள்....ச்சே...வார்த்தை வர மாட்டிங்குது...கண்டனங்கள்!

    பதிலளிநீக்கு
  14. பின்னூட்டங்களை வெளியிடாமல் காலையிலேயே விசுவாசமாய் வேலை பார்க்கும் கோவி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. சுவையான சுண்டலுக்கும்...
    சுண்டலின் பெயரிலமைந்த கிண்டலுக்கும்
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. கிண்டல்..சாரி...சுண்டல் நல்லா இருந்தது..:-)))

    பதிலளிநீக்கு
  17. நல்ல விற்பனை.

    அப்படியே வலப்ப்திவர்கள் சுண்டல் வித்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.

    பதிலளிநீக்கு
  18. //வடகரை வேலன் said...
    நல்ல விற்பனை.

    அப்படியே வலப்ப்திவர்கள் சுண்டல் வித்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.

    11:08 AM, August 20, 2008
    //

    வேலன்,
    முதலில் வலைப்பதிவாளர்களை வைத்துத்தான் எழுத நினைத்தேன்....20 பதிவர்கள் வரை எழுதலாம், அதுக்கும் மேல் எழுதினால் பதிவும் நீளமாகி படிப்பதற்கும் அலுப்பாகிவிடும். அதையெல்லாம் வீட...நம்மை வைத்து எழுதவில்லையே என்று மனதுக்குள் யாராவது வருந்துவாங்களே. எல்லோருக்கும் இருக்கும் மனநிலைதான் அது ! அதனால் தவிர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  19. ஜெகதீசன், நிஜமா நல்லவன், துளசி அம்மா, விக்கி, ராதாகிருஷ்ணன் ஐயா, சந்தனமுல்லை மற்றும் பரிசலார் ஆகியோருக்கு மிக மிக நன்றி !

    பதிலளிநீக்கு
  20. கோவி: P வாசு சார்! ஜோதிகா வை வைத்து நீங்கள் விற்ற சுண்டல் சூப்பரா போனி ஆச்சு! இன்னிக்கு ஏன் சார் டல் அடிக்குது?

    வாசு: ஆடி மாசம் யாரும் சுண்டல் வாங்க மாட்டாங்க கோவி.

    கோவி: அப்போ இன்னும் ஒருமாசம் கழித்து வந்து விற்கலாமே!

    வாசு: ஏற்கனவே ஒரு மாசம் கழித்து தான் விற்கறேன் கோவி. அடுத்த மாசம் வரைக்கும் வெயிட் பண்ணா சுண்டல் நாறிடும். கப்பு கம்மியா இருக்கும் போதே வாங்கி சாப்பிட்டு விடுங்கள்!

    கோவி: பரவாயில்ல வாசு சார்! காசு வேணுன்னா தந்திர்றேன், சுண்டல் வேணாம்.

    பதிலளிநீக்கு
  21. //மோகன் கந்தசாமி said...
    கோவி: P வாசு சார்! ஜோதிகா வை வைத்து நீங்கள் விற்ற சுண்டல் சூப்பரா போனி ஆச்சு! இன்னிக்கு ஏன் சார் டல் அடிக்குது?

    வாசு: ஆடி மாசம் யாரும் சுண்டல் வாங்க மாட்டாங்க கோவி.

    கோவி: அப்போ இன்னும் ஒருமாசம் கழித்து வந்து விற்கலாமே!

    வாசு: ஏற்கனவே ஒரு மாசம் கழித்து தான் விற்கறேன் கோவி. அடுத்த மாசம் வரைக்கும் வெயிட் பண்ணா சுண்டல் நாறிடும். கப்பு கம்மியா இருக்கும் போதே வாங்கி சாப்பிட்டு விடுங்கள்!

    கோவி: பரவாயில்ல வாசு சார்! காசு வேணுன்னா தந்திர்றேன், சுண்டல் வேணாம்.

    11:29 AM, August 20, 2008
    //

    மோகன்,

    வாசு மேல ஏன் இப்படி ஆசிட் வெறி ?
    :)

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. கோவி: ஷங்கர் சார்! உங்க கிட்ட சுண்டல் வாங்காதவங்களை கடல்ல புடிச்சி தள்றது ஞாயமா?

    ஷங்கர்: தப்பு செய்றவங்களை தண்டிச்சுதான ஆகணும் கோவி

    கோவி: சுண்டல் வாங்கலைன்றது ஒரு தப்பா?

    ஷங்கர்: நூறு பேருக்கு சுண்டல் விற்று அதில் அஞ்சு பேர் காசு தரலைன்னா தப்பா?

    கோவி: தப்பு இல்ல!

    ஷங்கர்: அஞ்சஞ்சு பேரா அஞ்சு தடவ வந்து ஒருத்தரும் காசு தரலைன்னா தப்பா?

    கோவி: தப்பு மாதிரி தான் தெரியுது

    ஷங்கர்: சரி, சுண்டல் வாங்கின யாருமே காசு தரலைன்னா?

    கோவி: யோவ், கோவில் சுண்டல ஆட்டைய போட்டுக்கிட்டு வந்து பீச்ல வித்தா எவன் காசு தருவான்?

    பதிலளிநீக்கு
  24. கோவி.கண்ணன்.. கலக்கிட்டீங்க.. அரசியல்வாதிகள் சுண்டலைப் பத்தி தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்..

    பதிலளிநீக்கு
  25. ஆஹா.. இப்படி ஒரு விளம்பரம் கொடுத்துருக்கீங்களே... பார்க்காம போயிட்டேன்.. மிக்க நன்றி :)

    சுண்டலை வெச்சி கிண்டல் பண்றது இது தானா :)

    பதிலளிநீக்கு
  26. // வெட்டிப்பயல் said...
    ஆஹா.. இப்படி ஒரு விளம்பரம் கொடுத்துருக்கீங்களே... பார்க்காம போயிட்டேன்.. மிக்க நன்றி :)

    சுண்டலை வெச்சி கிண்டல் பண்றது இது தானா :)
    //
    பாலாஜி,

    உங்கள் கண்ணில் படவில்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். பட்டுவிட்டது !

    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !