19 ஜூன், 2008

சந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப்பாத்துங்க...!

ஐயையோ......காப்பாத்துங்க...... ஒரு சின்ன பொண்ணு சந்திரமுகியாக மாறி சிங்கையில் பலரைப் பார்த்து 'லக்க...லக்க' சொல்லுது.

பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.

'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது

"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"



"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'

இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை. டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.

இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது

கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து.

யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.

என்ன கொடுமை சரவணா.......காப்பாத்து !

இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)

51 கருத்துகள்:

  1. வடுவூர் குமார் அண்ணன் தான் ரொம்ப நல்லவராம் - சந்திரமுகி சர்டிபிகேட்

    :)

    பதிலளிநீக்கு
  2. ஹா! ஹா!
    வாம்மா! மலேசிய மாரியாத்தா.
    அங்கு ரவா தோசையா??

    பதிலளிநீக்கு
  3. போச்சுடா, சான்றிதழ் வேறா? எங்கிட்ட சொல்லவேயில்லையே!! :-)

    பதிலளிநீக்கு
  4. //இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)//

    அனானி-அதர் ஆப்ஷன்களை இழுத்து மூடிட்டு கும்மிக்கு ஆளு கூப்பிட்டீங்கன்னா எப்படி? பின்னூட்ட பாலா கூட வரமாட்டாரு :-)

    பதிலளிநீக்கு
  5. /
    எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
    /

    ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  6. குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

    :)))

    பதிலளிநீக்கு
  7. லக்கி,

    உங்க விருப்பத்தை நிறைவேற்றீயாச்சு
    :)

    பதிலளிநீக்கு
  8. ஐயய்யோ!

    எப்படி வலிக்கப் போகுதோ?
    குழந்தை எப்படி அழப்போகுதோ தெரியலையே?


    இறைவா! வீணை வாசிப்பில் இருந்து எங்களைக் காப்பாற்று!

    எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொல்கிறோம்!

    பதிலளிநீக்கு
  9. என் ஸ்டூடண்டு நல்லாவே வாசிப்பா!

    வீ...ணை.. அப்படின்னு எழுத்துக் கூட்டி அழகா வாசிப்பா!

    பதிலளிநீக்கு
  10. எங்க ஹவுஸ் ஓனர் பாட்டுப் பாடி தொல்லை தரான்!

    எங்க வீட்டுக்கு ஒரு நாள் வந்து வீணை வாசிக்க முடியுமா குழந்தே!

    பதிலளிநீக்கு
  11. அப்போ அக்கா இனிமே பல் பிடுங்கப் பட்ட பாம்புன்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  12. என்னங்க நடக்குது இங்கே.. துண்டு போட்டுக்கறேன்.. அப்பால வாரேன்..

    பதிலளிநீக்கு
  13. //மங்களூர் சிவா said...


    ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.

    8:24 PM, June 19, 2008
    //

    சிவா,

    இதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். முறியடிக்கனும்
    :)

    பதிலளிநீக்கு
  14. //மங்களூர் சிவா said...
    குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

    :)))
    //


    ஒரு பல்லு புடுங்குற செய்தியைச் சொல்லி ஆத்தா...நம்மிடம் வாழ்வே மாயம் படம் பார்க்கும் எபெக்ட்டு வரனும்னு எதிர்பார்க்குது. கொடுமைதானே

    பதிலளிநீக்கு
  15. என்ன மொத்தமா புடுங்கிடலாமா?

    பதிலளிநீக்கு
  16. கோவி! வர வர உங்க உள்குத்துக்கு அளவே இல்லாம போச்சு!! டாக்டருக்கே பல்பிடுங்கின கதை ஓடிகிட்டு இருக்கு தமிழ்நாட்டிலே!! அது சம்மந்தமா நேரிடையா பதில் போடாம இப்படி போட்டா என்ன அர்த்தம்!!

    குழந்தைக்கு பல் பிடுங்கினா அப்பாவுக்கு ரொம்ப வலிக்கும் அதனால பார்த்து(அன்பா) மெதுவா பிடுங்கறோம் சரியா!!!

    (சிபி ஓக்கே!!!)

    பதிலளிநீக்கு
  17. ///இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)///



    ///Your comment has been saved and will be visible after blog owner approval. ///

    எப்படி?

    பதிலளிநீக்கு
  18. ///பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.//

    குட் கொஸ்டின்.

    பதிலளிநீக்கு
  19. //'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது///


    நாங்கெல்லாம் கையாலேயே பல்லை பிடுங்குவோம். இதுக்கு ஆப்புரேஷன் வேறயா? என்ன கொடும அப்பாவி இது?

    பதிலளிநீக்கு
  20. ///"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"///



    என்ன இது சின்னபுள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா எல்லா செலவும் அண்ணன் தானே செய்யணும்:)

    பதிலளிநீக்கு
  21. //நிஜமா நல்லவன் said...

    நாங்கெல்லாம் கையாலேயே பல்லை பிடுங்குவோம். இதுக்கு ஆப்புரேஷன் வேறயா? என்ன கொடும அப்பாவி இது?

    9:32 AM, June 20, 2008
    //

    நிந,
    மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு போவது போல பெரிய பில்டப் கொடுக்குது.... கொடுமை தானே.

    பதிலளிநீக்கு
  22. //நிஜமா நல்லவன் said...


    என்ன இது சின்னபுள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா எல்லா செலவும் அண்ணன் தானே செய்யணும்:)

    9:33 AM, June 20, 2008
    //

    சொத்தையே கூட எழுதி வையுங்க...ஒரு பய கேட்பானா ?

    பதிலளிநீக்கு
  23. ///"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'///


    ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. //நிஜமா நல்லவன் said...


    ///Your comment has been saved and will be visible after blog owner approval. ///

    எப்படி?
    ///

    மாடுரேசன் வைக்கவில்லை என்றால் சில மாடுகள் மேஞ்சிட்டு போய்டும்.

    பதிலளிநீக்கு
  25. ///இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை.///


    நல்லவேளை என்னோட காது பத்திரமா இருக்குபா.

    பதிலளிநீக்கு
  26. //ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

    9:35 AM, June 20, 2008
    //

    எல்லோரும் நல்லா வேண்டிக் கொள்ளுங்க...இன்னிக்குதான் ஆப்ரேசனாம்.....

    பதிலளிநீக்கு
  27. //டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.///

    நீங்களே ஐ டி டி போட்டு கான்பிரன்ஸ் கொடுத்துடுங்க. அவரு மட்டும் தப்பிச்சா நல்லாவா இருக்கும்?

    பதிலளிநீக்கு
  28. ///இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....///


    முதல்ல வாய திறக்க முடியுதான்னு கேளுங்க. அப்புறம் ரவா தோசை வாங்கலாம்.

    பதிலளிநீக்கு
  29. ///வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது///



    அய்யய்யோ என்ன கொடும இது? இதுக்கு ரவா தோசையே வாங்கி கொடுத்திடலாம்.

    பதிலளிநீக்கு
  30. ///கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... ///

    அடடா இதான் காரணமா? என்ன எல்லோரும் ஒளிஞ்சி இருக்காங்களேன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  31. ///இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து///

    அதென்ன அவ்வப்போது? எப்போதுமே அப்படி தானே?

    பதிலளிநீக்கு
  32. //யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......//


    நான் இங்க கும்மி அடிச்சதால எனக்கு தான் முதல்ல ஆரம்பிக்கு போல. எதுக்கும் நான் கொஞ்ச நாள் தலைமறைவு ஆகிடுறேன்:)

    பதிலளிநீக்கு
  33. ///சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.///



    குசும்பனே ரொம்ப குழப்பத்திலும் வருத்தத்திலும் இருக்காரு. வேற யாராவது தான் காப்பாத்தனும்:)

    பதிலளிநீக்கு
  34. ///இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)///


    அப்ப வேற பதிவுல கும்மி அடிக்க கூடாதா?

    பதிலளிநீக்கு
  35. //ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.//

    ஆமாம்!

    பதிலளிநீக்கு
  36. ///கோவி.கண்ணன் said...
    வடுவூர் குமார் அண்ணன் தான் ரொம்ப நல்லவராம் - சந்திரமுகி சர்டிபிகேட்

    :)///

    சந்திரமுகி சொன்னா சரியாதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  37. ///மங்களூர் சிவா said...
    /
    எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
    /

    ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.///


    :))

    பதிலளிநீக்கு
  38. ///மங்களூர் சிவா said...
    குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

    :)))///



    அண்ணே உங்களோட கொலைவெறி கவுஜைல இருந்து எங்களை காப்பாத்தினவங்க கிட்ட சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  39. ///நாமக்கல் சிபி said...
    ஐயய்யோ!

    எப்படி வலிக்கப் போகுதோ?
    குழந்தை எப்படி அழப்போகுதோ தெரியலையே?


    இறைவா! வீணை வாசிப்பில் இருந்து எங்களைக் காப்பாற்று!

    எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொல்கிறோம்!///

    ஓராயிரம் தடவை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. ///பரிசல்காரன் said...
    என்னங்க நடக்குது இங்கே.. துண்டு போட்டுக்கறேன்.. அப்பால வாரேன்..///



    எல்லா பதிவிலும் துண்டு போட்டுட்டு போறீங்க. நீங்க என்ன துணிக்கடை வச்சி இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  41. ////கோவி.கண்ணன் said...
    //மங்களூர் சிவா said...
    குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

    :)))
    //


    ஒரு பல்லு புடுங்குற செய்தியைச் சொல்லி ஆத்தா...நம்மிடம் வாழ்வே மாயம் படம் பார்க்கும் எபெக்ட்டு வரனும்னு எதிர்பார்க்குது. கொடுமைதானே///


    :))

    பதிலளிநீக்கு
  42. ///அபி அப்பா said...
    கோவி! வர வர உங்க உள்குத்துக்கு அளவே இல்லாம போச்சு!! டாக்டருக்கே பல்பிடுங்கின கதை ஓடிகிட்டு இருக்கு தமிழ்நாட்டிலே!! அது சம்மந்தமா நேரிடையா பதில் போடாம இப்படி போட்டா என்ன அர்த்தம்!!///



    எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

    பதிலளிநீக்கு
  43. ம்ம் ஒருத்தரோட வேதனை உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கிற அளவுக்கு சந்தோஷமா இருக்கா? நல்லா இருங்கப்பா. பதிவ படிச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கிளம்புறேன். அப்படியே நல்ல விதமா ஆப்புரேஷன் பண்ணி குணமடைய ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  44. //நிஜமா நல்லவன் said...
    ம்ம் ஒருத்தரோட வேதனை உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கிற அளவுக்கு சந்தோஷமா இருக்கா? நல்லா இருங்கப்பா. பதிவ படிச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கிளம்புறேன். அப்படியே நல்ல விதமா ஆப்புரேஷன் பண்ணி குணமடைய ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.
    //

    நிஜமா நல்லவன்,

    கும்மிக்கு நன்றி, உங்கள் சேவையை நினச்சாலே கண்ணுல தாரை தாரையா வருது. அப்படியே நம்ம அரசு அண்ணா பதிவுல போய் தொடருவோம். இங்ஙன போதும் !

    :)

    பதிலளிநீக்கு
  45. label:நகைச்சுவை ,மொக்கை//

    என் பல்லு வலி உங்களுக்கு எல்லாம் காமெடியா போச்சு இல்ல :((
    நான் ஒரு 3 பேருக்கிட்ட மட்டும் சொன்னால்,நீங்க மூனு பேரும் 3000 பேருக்கு போஸ்ட் போட்டு சொல்லியாச்சு.நல்ல கும்மி எடுத்துட்டீங்க இல்ல..போதும் நிறுத்திக்லாம்..ரொம்ப வலிக்குது..என் பல்லும் மனசும் :((

    பதிலளிநீக்கு
  46. :(
    இதைப்பத்தி யார் பதிவு போட்டாலும் ஆத்தா எனக்கு கால் பண்ணித் திட்டுறாங்க... உங்க பங்குக்கு நீங்களும் திட்டு வாங்கித் தரீங்க
    :(

    இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்கள்!!

    பதிலளிநீக்கு
  47. யார்ங்க இந்த நிஜமா நல்லவன்? உண்மை தமிழனுக்கு போட்டியா?

    பதிலளிநீக்கு
  48. என்ன இங்க ஒரே ரணகளமா இருக்குது! :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !