18 மே, 2008

சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்...

17 மே காலை 11 மணிக்கு சென்னையில் தரை இறங்கினேன், இறங்கியவுடன் சூரிய பகவானின் அரவணைப்பில் (வியர்வையால்) உருகிப்போனேன். அன்றுமுழுவதுமே வெளியில் சென்ற இடங்களிலெல்லாம் அனல் காற்று...கத்திரி வையிலாம்...28 ஆம் தேதி வரை இருக்குமாம்.

மே 18 மாலை ஆறுமணிக்கு பதிவர் சந்திப்புக்கு நண்பர்கள் பாலபாரதியும், லக்கிலுக்கும் அறிவிப்பு விட்டதைத் தொடர்ந்து, சென்னை சென்றதும் நான் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் படி எனது நண்பரின் 'சொந்த' காரை எடுத்துக் கொண்டு மாலை 5 மணி அளவில் மெரீனா கடற்கரையை அடைந்தோம்...போலிஸ் கூட்டம் பீதியை கிளப்பியது, நண்பர் கேட்டார் 'ஏன் டிராபிக் போலிஸ் இவ்வளவு கூட்டமாக நிற்கிறார்கள்....அப்பா டிராபிக் போலிஸ் தானா ?' வேறு ஒன்னும் இல்லையே ... பாலபாரதி காந்தி சிலைக்குப் பின்னால் லக்கியுடன் நிற்பதை தெரிவித்தார். காரை நிறுத்திவிட்டு சென்றோம்..நேர்கொண்டு கட்டித்தழுவினார்கள்... சரியாக மாலை 5.30 மணிக்கு பிறகு முரளி கண்ணன் வந்தார்..

அதன் பிறகு சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யா...இராமகி ஐயா.....திரு டோண்டு இராகவன் ...கேஆர் அதியமான்...தருமி ஐயா... டாக்டர் புரூனோ.....ஜ்யோவ்ராம் சுந்தர்....வளர்மதி...மற்றொமொரு சுந்தர்....இன்னும் சிலர்....வந்து 6 மணிக்கு கலை கட்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் பலபதிவர்களை நேர்முகம் கண்டார்கள்.

எல்லோரையில் நேரில் சந்தித்த புதிய அனுபவம் நெகிழ்சியாக இருந்தது.....நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.






20 கருத்துகள்:

  1. //கத்திரி வையிலாம்...28 ஆம் தேதி வரை இருக்குமாம்.//

    ஐய்யய்யோ....

    பதிலளிநீக்கு
  2. லக்கி லூக்கின் புகைப்படம் எங்கே :) :)

    பதிலளிநீக்கு
  3. நமக்கெல்லாம் அந்தப் பாக்கியம் எப்பொழுதோ!

    அசத்துங்க, கோவி...

    பதிலளிநீக்கு
  4. ஆகா ஆகா - அருமையான சந்திப்பு - வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே !! 16 - 17 சென்னையில் தான் இருந்தேன். தெரிந்திருந்தால் 18 சந்திப்பில் கலந்து கொண்டிருப்பேனே !! அண்ணன் தருமி கூடச் சொல்ல வில்லையே சென்னை செல்கிறேன் என்று.
    பரவாய் இல்லை - அடுத்த சந்திப்பில் கலந்து கொள்கிறேன்.

    இதே இடத்தில், காந்தி சிலையின் பின்புறம் உள்ள இதெ இடத்தில் 17ம் தேதி சனிக்கிழமை அன்புடன் குழும அன்பர்கள் சந்திப்பு நடந்தது. கலந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. புகைப்படங்களையும் பதிவையும் படிக்கும் போதே ஒரு நெகிழ்வு.

    இனிய பயண அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள். அதன் பயன் விளையப்போகும் பதிவுகளுக்கும் சேர்த்து இப்போதே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இறங்கியதுமே தமிழ்[மண]ப் பணியா?
    நடத்துங்க!

    பதிலளிநீக்கு
  7. உங்களைச் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய பேசிப் பழக வேண்டும் என்பது என் அவா.

    பதிலளிநீக்கு
  8. விளக்கம் போதாது. சீக்கிரம் எழுதுங்க.

    கலை கட்டியது = களை கட்டியது.

    பதிலளிநீக்கு
  9. அனல் காற்று கடுமை தான்... பல படங்களில் தெரிகிறது.
    :-)

    பதிலளிநீக்கு
  10. மிகச்சிலரை மட்டுமே அடையாளம் தெரிகிறது. எல்லோரையும் குறிப்பிட்டு இனிமேல் எழுதுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சுடச்சுட படத்துடன். விரைவில் விரிவாக எழுதவும்

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள நண்பருக்கு,

    பதிவர் சந்திப்பு என்பது எனக்கு பிடித்தமான விஷயம். அறிமுகமில்லாத நண்பர்களையும், அறிமுகமான நண்பர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க முடியும் என்பதே அதற்கு காரணம்.

    அதனாலேயே இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று உறுதியாக இருந்தேன்.. ஆனால், எதிர்பாராமல் வந்த வேலை காரணமாக சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.

    இதற்காக உங்களிடமும், அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்போது அவசியம் சந்திக்கிறேன்.
    வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  13. //இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் பலபதிவர்களை நேர்முகம் கண்டார்கள்//

    அப்படியாங்க !!!

    பதிலளிநீக்கு
  14. புகை படத்தில் இருப்பவர்கள் யார் என்பதை கூறினால், உபயோகமாக இருக்கும் ( நாளை பின்ன அடி வாங்கினால் யார் அடித்தது என்றாவது தெரிந்து கொள்ள வேண்டாமா )

    பதிலளிநீக்கு
  15. தமிழ்பதிவுலக ஜாம்பவான்களின் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.படங்களில் பதிவாளர்களின் பெயர்களை போட்டால் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. ஏன் சார், வெறும் போட்டோவை மட்டும் போட்டால் போதுமா?
    யார், எவர் என குறிப்பிட வேண்டாமா?
    அப்புறம் என்னைப்போல பதிவுலகினில் புதியவர்கள் எப்படி அறிந்து கொள்வதாம்.

    பதிலளிநீக்கு
  17. நல்லா இருங்க இங்கு வந்த பிறகுதான் அங்கு வரனும் என்று இருந்தீங்களா?

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் திரு. கோவி கண்ணன்.
    தாங்கள் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது, படம் பிடித்து போட்டது எல்லாம் அருமை.
    நானும் இப்போது தமிழகத்தில் தான் இருக்கிறேன். கத்திரி வெயிலை முடித்துக் கொண்டு வரலாம் என்று இருக்கிறேன். அதான் 28 -ம் தேதி.

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !