பின்பற்றுபவர்கள்

15 ஆகஸ்ட், 2007

வெள்ளைக்காரன் பெற்றுதந்த சுதந்திரம்

சுதந்திரநாளை நினைவுறும் போது நாம் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்று நினைக்க முடிகிறது. அதே சமயத்தில் அடிமைகளாக இருந்தோம் என்பதை நாம் மறக்கவே முயற்சிக்கிறோம். மண்ணின் மைந்தர்களை அன்னிய ஆட்சியாளர்கள் என்னதான் பாலும் தேனும் ஊற்றி வளர்த்தாலும் அடிமைத்தனம் அடிமைத்தனம் தான். தங்கக் கூண்டு செய்து அதில் கிளையை அடைப்பதால் கிளிக்கு என்ன மகிழ்வு இருக்க முடியும் ?

வெள்ளைக்காரன் மட்டும் தான் நம்மை அடிமைபடுத்தி இருந்தானா? சொந்தமண்ணில் சாதிபிரிவினையால் ஒதுக்கியும், ஒடுங்கியும் இருந்தவர்களின் தயவுகள் வெள்ளைக்காரனை விரட்டப் பயன்பட்டது என்றால் அதுவே அவர்களின் விடுதலைக்காகவும் அமைந்துவிட்டு இருக்கிறது என்று நினைக்கமுடிகிறது. சுதந்திரத்திற்கு முன் படிப்பும் பதவியும் புத்தியுள்ளவர்களால் மட்டுமே அடையமுடியும் என்றும் அந்த புத்தியானது பிறப்பின் அடிப்படையில் அமைந்தது என்று சொல்லுபவர்கள் நம்புவதைவிட நமக்கு புத்தியில்லை என்று கல்விகற்கவே போகாமல் வயிற்றுப்பாட்டைப் பார்த்தால் போதும் என்று அடிமைத்தனத்திற்கு சுயவேலி அமைத்துக் கொண்டு காலில் செருப்பணியக் கூட அனுமதிமறுக்கப்பட்ட நிலையில் தான் நம்மக்கள் இருந்துவந்தனர். இவர்கள் மக்கள் தொகையில் பெரும்பங்காக இருந்ததால், ஆட்சி அதிகாரத்தை இழந்த ஆதிக்க சக்திகள் வெள்ளைக்காரனை விரட்டுவதற்கு இவர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

வெளி உலகுக்கு வந்து போராட்டத்தில் குதித்தாலேயே பல்வேறு தரப்பு (தாழ்த்தப்பட்ட) மக்களும் விழிப்புணர்வு பெற்று வாழ்க்கை என்பது செத்துமடிவதற்கும், அடிமையாக இருப்பதற்கு மட்டுமல்ல, தாங்கள் எந்தவிதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றுவெள்ளைக்காரனுக்கு எதிராக போராடியபோது அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். புத்தியுள்ளவனே பலவான் ஆனால் அந்த புத்திக்கும் பிறப்பிற்கும் தொடர்பு இல்லை என்பதை வெள்ளையர்களைப் பார்த்து தெரிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்தனர்.

வெள்ளையர்கள் எளிதாக நம் நாட்டைக் கைப்பற்றுவதற்கு இங்கு பரவிகிடந்த வேற்றுமைகளே காரணமாக அமைந்துவிட்டு இருந்தது. எல்லோரும் அடிமையான போது தான் வெள்ளையனை விரட்டவேண்டும் என்ற வேட்கையில் சாதிபிரிவினைகளை (தற்காலிகமாக) மறந்து ஒன்றுபட்டனர். வெள்ளையரால் விளைந்த நன்மைகளில் மிகப் பெரிய நன்மை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்பது நிராகரிக்கப்பட்டு சாதியத்தின் முதல் சாவுமணியாக அது அமைந்தது என்று சொன்னால் மறுப்பவர் எவரும் இல்லை என்றே நினைக்கிறேன். அதன்வழி இந்தியா என்ற ஒருமைப்பாட்டில் பல்வேறு மானிலத்து மக்கள் ஒன்றிணைந்தனர்.

மற்றொரு நன்மை காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட பலநாடுகள் விடுபட்டபோது அவைகளுக்கு கிடைத்த ஒரே பலன் ஆங்கில அறிவு. உலகலாவிய வர்தகம் மற்றும் தொழில் துறைகளில் நம்மவர்கள் முன்னேறுகிறார்கள் என்றால் தாய்மொழியுடன் சேர்த்து நாம் ஆங்கிலமும் எளிதாக படிக்க முடிந்ததாலே அவை சாத்தியம் ஆயிற்று.

எது எப்படியோ, நாம் விடுதலை பெற்றுவிட்டோம் சொந்தமண்ணில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு கிடைத்தது என்பதை நினைக்கும் பொழுது வெள்ளைக்காரனிடமிருந்து கிடைத்த சுதந்திரம் என்று சொல்லிக் கொள்வதைப் போலவே வெள்ளைக்காரனால் பெற்ற சுதந்திரம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். ஆம் வெள்ளையர் வருகையால் ஆதிக்க சக்திகளிடமிருந்தும் இந்தியா ஓரளவுக்கு விடுதலை அடைந்திருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது என்னாடே !

யாதும் ஊரே யாவரும் கேளிர் !


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

18 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

//எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது என்னாடே !//

சுந்திர தின நல்வாழ்த்துக்கள்!


// வெள்ளையர் வருகையால் ஆதிக்க சக்திகளிடமிருந்தும் இந்தியா ஓரளவுக்கு விடுதலை அடைந்திருக்கிறது. //


மிகச் சரியாக சொன்னீங்க!

ஜெகதீசன் சொன்னது…

கோவி,
சுந்திர தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஜெகதீசன்

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே!
வித்தியாசமான கோணம் .ஏற்கத்தக்க கருத்துக்கள்.

காட்டாறு சொன்னது…

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! கொஞ்சம் different பார்வை. நல்லா இருக்குது.

Avanthika சொன்னது…

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

சிபா,

உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

சுதந்திர நாளில் நட்சத்திரமாக நீங்கள் மின்னுவது மேலும் சிறப்பு !
:)

Thamizhan சொன்னது…

நாட்டுச் சுதந்திரம் கிடைக்குமுன் சமுதாய சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று 1924 களிலிருந்தே சமுதாய விடுதலைக்குப் பலர் போராடினார்கள்.நாட்டுச் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் சாமுதாயச் சுதந்திரம் ஓரளவுக்குத்தான் கிடைத்திருக்கிறது.
உண்மையான சமுதாய சுதந்திரம்,பிறப்பொக்கும் எல்லா உயிற்கும் என்று அனைவரும் சமம்,ஆண்களும் பெண்களும் சமம் என்று விரைவில் உண்மையான சுதந்திரம் கொண்டாடத்தான் போகிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி,
சுந்திர தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஜெகதீசன்
//

நன்றி ஜெகதீசன் அவர்களே !
உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவியாரே!
வித்தியாசமான கோணம் .ஏற்கத்தக்க கருத்துக்கள்.
//

பாராட்டுக்கு நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//காட்டாறு said...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! கொஞ்சம் different பார்வை. நல்லா இருக்குது.
//

காட்டாறு,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்,

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அவந்திகா said...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
//

தங்களுக்கும் இனிய விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
நாட்டுச் சுதந்திரம் கிடைக்குமுன் சமுதாய சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று 1924 களிலிருந்தே சமுதாய விடுதலைக்குப் பலர் போராடினார்கள்.நாட்டுச் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் சாமுதாயச் சுதந்திரம் ஓரளவுக்குத்தான் கிடைத்திருக்கிறது.
உண்மையான சமுதாய சுதந்திரம்,பிறப்பொக்கும் எல்லா உயிற்கும் என்று அனைவரும் சமம்,ஆண்களும் பெண்களும் சமம் என்று விரைவில் உண்மையான சுதந்திரம் கொண்டாடத்தான் போகிறோம்.
//

தமிழன்,

நீங்கள் சொல்வது சரிதான்,

சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சி கலைப்படவேண்டும் என்று காந்திஜி வழியுறுத்தியதன் நோக்கம் மீண்டும் ஆதிக்க சக்திகள் வசம் இந்தியா வீழ்ந்துவிடக் கூடாது என்பதே. உங்கள் கருத்தும் அதனுடன் ஒத்துப் போகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

அதியமான், இலவசம் குறித்து நீங்கள் சொல்வது உண்மைதான்.

இங்கே கூட அதே கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சிந்திக்க வைத்த தலைப்பு,ஆழமான கட்டுரை!
பாராட்டுக்கள்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்

ILA (a) இளா சொன்னது…

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சிந்திக்க வைத்த தலைப்பு,ஆழமான கட்டுரை!
பாராட்டுக்கள்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்
//

யோகன் அவர்களே பாராட்டுக்கு நன்றி !

Thekkikattan|தெகா சொன்னது…

நல்ல கட்டுரை கோவி! சில நேரங்களில் வெளியிலிருந்து வரும் அன்னிய சக்தி கண்டிப்பாக தனது தடயத்தை ஏதாவது ஒரு வழியில் விட்டுச் செல்லும்.

நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் விசயம் இதன் மூலமாக - விழிப்புணர்வு. ஆனால், இன்னமும் நாம் அதனை சரிவர பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
நல்ல கட்டுரை கோவி! சில நேரங்களில் வெளியிலிருந்து வரும் அன்னிய சக்தி கண்டிப்பாக தனது தடயத்தை ஏதாவது ஒரு வழியில் விட்டுச் செல்லும்.

நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் விசயம் இதன் மூலமாக - விழிப்புணர்வு. ஆனால், இன்னமும் நாம் அதனை சரிவர பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
//

தெகா,

முதலில் பாராட்டுக்கு நன்றி,

ஆம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது. விழிப்புணர்வு அதற்கு தூண்டுகோளாக அமைந்து தாழ்வுணர்சிகளை துண்டிக்கும் என நம்புவோம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்