12 ஜூன், 2007

வாங்க மூனுக்கு போகலாம் !


உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !


உலக மக்களை உயர்த்தும் நாள் !

சரித்திரத்தில் சரித்திரம் படைக்கும் நாள் !

நாளைய பிரதமரின் இன்றைய வெளியீடு !

சிங்கத் தமிழன் சினந்து எழுகிறான் !

எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !

உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் !

இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !

இறைவன் இன்று உலகமக்கள் அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார் !

இன்று ஒரு புதிய உலகம் பிறக்கிறது !

நெப்போலியனுக்கு பிறகு உலகம் பார்க்கப் போகும் ஒரே வீரன்

தலைவனின் தலைமை நாடுவோம், அவன் பாதம் போற்றுவோம்.

சி வா ஜி

:))))))))))))



நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிவாஜி வெளியீட்டு நாள் வாசகத்தை பகிர்ந்து கொண்டு ரஜினி ரசிகர்களுக்கு உதவுங்கள்.

என்னது ... தமிழ்நாட்டு மேல் ஏன் இன்னும் எவனும் குண்டு போடலையா ?

ன்னு கேட்கிறிங்களா ?

ஆளைவிடுங்க சாமி !!!

11 கருத்துகள்:

  1. //உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !//

    ஸ்பெல்லிங் மிஸ்டேக்? உலக "மூடர்களுக்கு உப்பற்ற நாள் "

    பதிலளிநீக்கு
  2. //எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !//

    ஏன் மறுபடியும் இமய மலைக்கு வந்து என்னை பாக்கனுமா?

    பதிலளிநீக்கு
  3. //இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !//


    ஏன் இதுதான் அவருக்கு கடைசி படமா?

    பதிலளிநீக்கு
  4. //உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் //

    ஆமா ஒலகத்திலயே ஒரே நாள்ள அதிகம் பேர் மெண்டலானது இன்னைக்குத்தான்

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டமிட்ட அனைத்து அமுகவினருக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
  6. சிவாஜி பற்றிய இந்தப் பதிவுக்கு அனைத்துலக ரஜினி ரசிகர்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    :))

    பதிலளிநீக்கு
  7. கலையுலகத் தந்தை இன்று கலைதெய்வத்துடன் படத்தைப் பார்த்துக் களித்தாராமே!

    :))))

    பதிலளிநீக்கு
  8. மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?

    பதிலளிநீக்கு
  9. //சதுர்வேதி said...
    மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?
    //

    பிடிக்கவில்லை என்றால் 'சிவாஜி பார்த்துட்டு முன்னுக்கு போங்க' ன்னு டைட்டில் மாத்திடலாமா ?

    மிஸ்டர் சதுர்வேதி ?

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !