3 ஏப்ரல், 2007

வம்பை வாடைக்கு விடுவது எப்படி ?

மொக்கை பதிவு போடுவது பற்றி செந்தழலாரும், நாமக்கல்லாரும் பி.எச்.டி பாடம் நடத்த நான் பாட்டுக்கு சும்மா இருந்தால் என்னவாம் ?

முதலில் பிரச்சனைக்கு உரிய பதிவுகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு அனானிக்கு வழி இருக்கான்னு பாருங்க. இருந்தது என்றால் ப்ளாக்கர் அல்லாத கணக்குக்கும் ( அதர் ஆப்சன்) வழி இருக்கும், உங்களுக்கு பிடிக்காத பதிவரின் பெயரில் அவரு போடுவது போல ஒரு அதர் ஆப்சன் பின்னூட்டம் போடுங்க. அவ்வளவுதான்.

அவருக்கும் பதிவு எழுதிய அவருக்கும் ஆகவில்லையென்றால் காழ்புணர்வுகள் மறுமொழியில் எகிறும். யாருக்கு யாரைப் பிடிக்கவில்லை என்பது பின்னூட்டம் வெட்ட வெட்ட ... வெட்ட வெளிச்சமாகிவிடும். சில அவசர குடுக்கைகள் பின்னூட்டம் சம்பந்தப்பட்ட நபர்தான் போட்டு இருக்கிறாரா என்று ஆராயமலே போட்டு தாக்க ஆரம்பிச்சிடுவாங்க.

இப்படி செய்தால் நீங்களே கருப்பு, நீங்க தான் சிவப்பு, நீங்கதான் 'பாலா' என பல அவதாரம் எடுக்கலாம். சண்டை மூட்டிவிட்ட மாதிரியும் இருக்கும்.அரிப்புக்கு சொறிஞ்சிகிட்ட மாதிரி இருக்கும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டுவதை விட வம்பை வாடகைக்கு விடுவது சாலச் சிறந்தது. நாம சொந்த காழ்பை (வம்பை) தீர்த்துக் கொள்ள ... இந்த கிறுக்கு வழியில் கிடைக்கும் குறுகுறுப்புதான் இதில் வாடகை.


பிகு : அனானி, அதர் ஆப்சன் வைத்திருக்கும் பதிவர்களின் எச்சரிக்கைக்காக எழுதப்பட்டது !
:)

16 கருத்துகள்:

  1. "வம்பை வாடகைக்கு விடுவது"

    தலைப்பு சூப்பருங்கோவ்!

    பதிலளிநீக்கு
  2. GK,

    இதெல்லாம் நியாமா?

    Ha Ha Ha..

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. //
    நாமக்கல் சிபி said...
    ஐய்யா! முதல் ஆளா வந்துட்டேன்!
    //

    எதுக்கு வாடகை வசூல் பண்ணுவதற்கா ?
    :)

    பதிலளிநீக்கு
  4. //எதுக்கு வாடகை வசூல் பண்ணுவதற்கா ?
    //

    ஹிஹி!

    பதிலளிநீக்கு
  5. அதர் ஆப்ஷன் எடுத்திட்டீங்களா, தழலின் பதிவை பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  6. //ஐய்யா! முதல் ஆளா வந்துட்டேன்!//

    உண்ட கட்டி வாங்கின பழக்கம் இன்னுமா போகலை ?

    பதிலளிநீக்கு
  7. //உண்ட கட்டி வாங்கின பழக்கம் இன்னுமா போகலை ?
    //

    கோவிக்காதவரே!

    உண்ட கட்டின்னாலும் சரி! சிதறு தேங்காய்னாலும் சரி! நான்தான் முதல் ஆளா இருபேன்!

    :))

    பதிலளிநீக்கு
  8. சிபியாரே,

    பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும் னு ஒரு எதிர் கேள்வி கேட்காமல் ஒத்து ஊதுறினங்க !
    :)

    பதிலளிநீக்கு
  9. //பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும் னு ஒரு எதிர் கேள்வி கேட்காமல் ஒத்து ஊதுறினங்க !
    :)
    //

    அக்காங்க்!

    வேற யாருக்குத் தெரியப் போகுதுன்னு ஒரு தெகிரியம்தான்!

    :))

    பதிலளிநீக்கு
  10. //பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும்//

    ஆஹா! இப்ப புரியுது!

    :))

    நான் சீரியஸாவே எடுத்துக்கலை! சீரியஸா எடுத்திருந்தா அப்படித்தான் கேட்டிருப்பேன்.

    அப்பக் கூட காமெடிதான்!

    கோவிக்காத கண்ணன் பேரு ரொம்ப நல்லா இருக்குதுங்க!

    :))

    பதிலளிநீக்கு
  11. ஒத்துக்கிறோம் ஒத்துக்கிறோம். எந்தச் சந்தேகமும் இல்லை. :-)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !