2 ஜூலை, 2006

படகில் பயணம் ...



படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
என்னுள் எழும் எண்ணம்,
படகுகள் பலவிதம் !
ஒவ்வொன்றும் ஒருவிதம் !


அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள்,
அமைதி நடுக்கடலுக்குள் துணிந்து செல்லும் படகுகள்,
ஆற்றில் இலக்கு தெரிந்து சீராக செல்லும் படகுகள்,
அக்கரையும், இக்கரையும் மட்டுமே தெரிந்த பரிசல் படகுகள்,
அனைத்துக் கரைகளையும் அறிந்த பெரும் படகு என கப்பல்கள் !
ஆழமூழ்கி எழுந்து நிற்கும் நீர்மூழ்கிக் படகு கப்பல்கள் !

ஆனால் எந்த படகானாலும், அவை
உடைந்து உருக்குலைந்து போகும் போது,
ஒரு நாள் கரைக்குத் திரும்பியதும்,
வெம்தணலில் எறிந்து போகும் கட்டைகளே !

படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
நெடுந்தூரப் பயணத்தின் ஊடாக

எதாவது படகின் வழி என் பயணம்
தொடர்கிறது என்றும் எண்ணிக் கொள்வேன் !

4 கருத்துகள்:

  1. மரணம் மற்றும் பிறப்பின் சாயல் உள்ள கவிதை இது. (வாழ்க்கை ?!)




    சகபயணி
    பச்சோந்தி

    பதிலளிநீக்கு
  2. //Chameleon - பச்சோந்தி said...
    மரணம் மற்றும் பிறப்பின் சாயல் உள்ள கவிதை இது.
    //
    இது போட்டிக்காக எழுதியது அல்ல... அதற்கு வேறொரு கலவையை தாயார்படுத்தி விட்டேன்.
    பயண நண்பருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //ஜயராமன் said...
    நல்ல கவிதை.
    //
    வாங்க ஜயராமன் சார்... கெட்டப்ப மாத்திட்டிங்களா ? கேமரா பேட்ரி வேலை செய்யவில்லை என்று கேள்விப் பட்டேன் பின் எப்படி ?

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !