23 ஜூன், 2006

திமுகவில் செந்தில் ?

டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் பதிவுகளில் எழுதும் நகைச்சுவை கலாட்டாக்களை படித்து வயிறுவலிக்காதவர்கள் இல்லை. அடியேனும் அவர் எழுத்துக்களை படித்து வயிறு குலுங்குபவன். எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும். இந்த பதிவு ஓட்டுப்பதிவுக்கு பிறகு எழுதியது. நேரமின்மையால் மறந்தே போனேன்.

திமுகவில் செந்தில் ?

கவுண்டமணி : ஏன்டா திருவோடு தலையா, பெருசா சவுண்டு உட்ட, இப்ப இருக்கிற எடம் தெரியலையே ?

செந்தில் : போங்கண்ணே, சினிமாவுல கைகழுவிட்டாங்கன்னு இங்க வந்தா, சரி அத விடுங்கண்ணே !

கவுண்டமணி : நீ ஒரு காமடியன், நீ பைட் பண்ணினா ஜெனங்க ஏத்துப்பாங்களா ?

செந்தில் : அண்ணே, அண்ணே, அது இல்லண்ணே, நான் சொல்லவந்ததே வேற

கவுண்டமணி : இப்ப என்ன ஆயிடுச்சின்னு, முடியில்லதா தலைய போட்டு முட்டிக்கிற ?

செந்தில் : அண்ணே நம்ப காமடியெல்லாம் எடுபடாது போலருக்கண்ணே !

கவுண்டமணி : ஒன்டிக்கு ஒந்தி மல்யுத்தம்னு போட்டு தாக்கிட்டு, இப்ப எதுக்குடா பம்முற

செந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே

கவுண்டமணி : வடிவேலு வெச்ச வெடியில நம்ம பொழப்பு நாறிபோச்சுன்னு ஒதுங்குனா, அப்பப்பா இந்த அரசியல் வாதிங்க இருக்கானுங்களே ...

செந்தில் : அதாண்ணே எனக்கும் புரியல ?

கவுண்டமணி : பேசாம ஒன்னு பண்ணு

செந்தில் : என்னண்ணே ?

கவுண்டமணி : திமுக பக்கம் போயிடு !

செந்தில் : அது எப்படிண்ணே, இவ்வளவு கருணானிதிய திட்டிட்டு ?

கவுண்டமணி : அடப் போட, தேங்காத்தலையா ஓடிப் போன கரடிய, அவுங்க திரும்ப புடிச்சி கட்டிக்கலையா ?

செந்தில் : என்னாண்னே புதுச கரடி வுடுறிங்க ?

கவுண்டமணி : நான் கரடின்னு சொன்னது, நம்ப சின்ன பையன் சிம்புவோட அப்பனை தான்டா ஊத்தவாயா !

செந்தில் : இப்ப புரியுதுண்ணே

கவுண்டமணி : நாமல்லாம் காமடி நடிகர்கள், நாம பேசுனதெல்லாம் ஜெனங்க கேட்டு சிரிப்பாங்க கண்டிப்பா சிந்திக்க மாட்டாங்கடா

செந்தில் : அப்ப, கருணாநிதிய திட்டுனத மறந்துடுவாங்கன்னு சொல்லிறிங்களா ?

கவுண்டமணி : ஆமன்டா ஆப்ப வாயா !

செந்தில் : அண்ணே, நீங்க அறிவு ஜீவிண்ணே, நீங்க ஏன்ணே ஒரு கட்சியல சேரக்கூடாது ?

கவுண்டமணி : டேய் உனக்காவது அப்பப்ப அட்வைஸ் அள்ளிவிட நான் இருக்கேன், எனக்கு எவன்டா இருக்கான் ?

செந்தில் : நீங்க சொல்றதும் சரிதான்னே

கவுண்டமணி : அப்படியா ? அப்படியே திரும்பி பார்காம அறிவாலயம் பக்கமா ஓடிபோயிடு, அரசியல் அது இதுன்னு என்ன அடிவாங்க வெச்சுடாதா, வயசாச்சுடா, இந்த எழவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது

செந்தில் : அண்ணே, அண்ணே !

கவுண்டமணி : மவனே, நீ இன்னும் போவல ?
என்று கோபமாக திரும்ப, செந்தில் ஓட்டமெடுக்கிறார்.

9 கருத்துகள்:

  1. குலுங்கி குலுங்கி சிரித்தேன் கோவி.கண்ணன்.

    பதிலளிநீக்கு
  2. அப்படியே செந்தில் இடுப்புமேல கவுண்டர் ஒரு கிக் கொடுக்கிறமாதிரி ஒரு படம் போட்டீங்கன்னா தூக்கிட்டு போயிரும்..

    பதிலளிநீக்கு
  3. இட்டிலி வடையார் போட்ட "துக்ளக்" கட்டுரை ,மிக வேதனை தந்தது; நானும் ஈழத்தமிழன் என்பதால்!தூங்குபவனை எழுப்பலாம்;தூங்குவது போல் நடிப்பவனை???????
    உங்கள் "கவுண்டர்- செந்தில்"- சிரிக்க வைத்தது.
    மிக அருமை!
    நன்கு சிரிச்சேன் "கரடி" உவமைக்கு!
    யோகன் பாரிஸ்

    பதிலளிநீக்கு
  4. //விடாதுகறுப்பு said...
    குலுங்கி குலுங்கி சிரித்தேன் //
    பக்கத்தில் கறுப்பு பூனை படம் கூட எனக்கு சிரிக்கிறமாதிரி தெரியுது :)

    பதிலளிநீக்கு
  5. //செந்தழல் ரவி said...
    அப்படியே செந்தில் இடுப்புமேல கவுண்டர் ஒரு//
    பாவம் செந்தில் ஏற்கனவே நொந்து வெந்துபோயிருக்கிறார் அவரைப் போய் ..

    பதிலளிநீக்கு
  6. //paarvai said...
    உங்கள் "கவுண்டர்- செந்தில்"- சிரிக்க வைத்தது.
    மிக அருமை!//
    காயத்துக்கு மருந்தாக என்னுடைய காமடி விருந்து இருந்ததா ?
    நன்றி அய்யா !

    பதிலளிநீக்கு
  7. //செந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே
    //

    நல்ல கற்பனை.
    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !