25 மே, 2006

அப்பாவும் மகனும் !

மூன்று வயதுவரை தாய்ப்பால் எனக்கு,
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !

பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !

ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !

கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !

கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !

நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !

அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !

தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !

3 கருத்துகள்:

  1. //தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
    தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !
    //
    ரொம்ப ரொம்ப அருமையான வரிகள். கலக்கல் கவிதை

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கோவி கண்ணன்

    அருமையான கவிதை - நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் வளரும் விதத்தில் எவ்வளவு வித்தியாசம். அருமையான கவிதைக்கு ஏற்ற படம்.

    //நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
    கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ ! //

    கலாச்சார மாற்றம்

    அத்தனை வரிகளும் அருமை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. இரண்டாண்டு கழித்து அயலகத்தில் இருந்து வந்திருக்கும் பாராட்டு - இப்பதிவு ரசிக்கத்தகுந்ததுதான்

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !